அமெரிக்காவில் 62 வயதான பெரும் கோடீஸ்வரரை 22 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட நிலையில் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கோடீஸ்வர தொழிலதிபரான Bill Hutchinson (62) டெக்ஸாஸில் உள்ள உணவகம் ஒன்றில் Ramirez (22) என்ற அழகிய இளம்பெண்ணை சந்தித்தார்.
இருவரும் நட்பான நிலையில் பின்னர் காதலர்களாகி தற்போது தம்பதிகளாக மாறியுள்ளனர். Hutchinson-ஐ சந்தித்த போது அவர் ஒரு கோடீஸ்வரர் என்பதை Ramirez உணர்ந்திருக்கவில்லை.
இருவருக்கும் 40 வயது வித்தியாசம் உள்ள நிலையில் தங்கள் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பேசியுள்ளனர்.
Hutchinson கூறுகையில், பெண்கள் ஆண்களை விட முதிர்ச்சியுள்ளவர்கள் என்று நான் நினைக்கிறேன், என் வயதிற்கு நான் மிகவும் முதிர்ச்சியற்றவன் என்றே கருதுகிறேன்.
எனக்கும் Ramirez-க்கும் இடையில் நல்ல புரிதல் உள்ளது, நாங்கள் இருவரும் மிகவும் அரிதாகவே வாக்குவாதம் செய்வோம்.
எங்களின் உறவு உண்மையானது, என்னுடைய இரண்டு திருமணங்கள் தோல்வியில் முடிந்தது, ஆனால் Ramirez உடனனான திருமணம் அப்படியில்லை என கூறியுள்ளார்.
Ramirez கூறுகையில், என் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. என் கணவரின் பிள்ளைகளுக்கு நான் வளர்ப்பு தாயாக இருக்கிறேன். தாய்மைப் பாத்திரத்தை நிரப்ப இது அனுமதிக்கிறது.
அவர்களுக்கு ஒரு தாய் இருக்கிறார், ஆனாலும் நான் தாய் ஸ்தானத்தில் இருப்பது திருபதியளிக்கிறது என கூறியுள்ளார்.