லண்டனில் பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்: ஸ்தம்பித்த பொதுமக்கள்!!

879

லண்டனில் பரபரப்பான சாலையில் பொதுமக்கள் மத்தியில் இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

லண்டனில் ஆக்ஸ்போர்டு சாலையில் பரபரப்பாக இயங்கும் சந்தைப்பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

குற்றுயிராக மீட்கப்பட்ட அந்த இளைஞர், பின்னர் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை மற்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் மூன்று நபர்களை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


சம்பவம் நடந்தபோது அப்பகுதியில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் அமர்ந்திருந்த நபர் தாம் நேரில் பார்த்ததாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் திடீரென்று தரையில் சரிந்ததை தாம் பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒருவர் சாலையில் ஒரு இளைஞரை கையில் வாளுடன் துரத்துவதைப் பார்த்ததாக சிலர் கூறியிருந்தாலும், அது உறுதிபடுத்தப்பட்ட தகவல் அல்ல என கூறப்படுகிறது.