டிக்டாக்ல சும்மா கைய காட்டுனா மட்டும் போதும் பணம் கொட்டும்… ஒரு போஸ்ட் போட 6 கோடி கட்டணம்!!.

1330

Khaby Lame..

டிக்டாக் மூலம் வாழ்ந்தவர்களும் உண்டு,அதனால் தொல்லைகளை அனுபவித்து வருபவர்கள் ஏராளம். ஆனால் Khaby Lame என்பவர் டிக்டாக் வாயிலாக தொட்டு பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பிரபலமான ஒருவர் தான் இந்த Khaby Lame. ஹோட்டல், வீடுகளில் வேலை செய்து வந்தநிலையில், வேலை இழந்த விரக்தியில் டிக்டாக் செய்து பிரபலமானார்.

டிக்டாக் தளத்தில் உலகளவில் அதிகப் பாலோவர்களைக் கொண்டு உள்ளது Khaby Lame தான். இவரது டிக்டாக் கணக்கை சுமார் 150 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர். இன்று டிக்டாக், இன்ஸ்டா தளத்தில் ஒரு போஸ்ட் போடுவதற்கு 750000 டாலர் வாங்குகிறார்,


அதாவது கிட்டதட்ட 6 கோடி ரூபாய். இதுமட்டும் அல்லாமல் இந்த வருட இறுதிக்குள் 10 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு அளவை எட்ட உள்ளார் Khaby Lame. இவருடைய வளர்ச்சி பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சாதாரண வேலையைச் செய்து வந்த Khaby Lame இன்று 700 கோடி ரூபாய் சொத்து மதிப்பை எட்டவுள்ளார். அதனோடு, Khaby Lame தன்னைப் போவே இருக்கும் பிற விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள்,

சமுகவலைதள influencer-களை இணைக்கும் Iron Corporation என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். Khaby Lame சற்று வித்தியாசமானவர் ரியல் எஸ்டேட்-ல் அதிகளவில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.