பிரித்தானியாவில் நகரின் முக்கிய பகுதியில் பயங்கர தீ விபத்து! தீயை அணைக்க போராட்டம்: கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள்!!

446

பிரித்தானியாவில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவின் பிர்மிங்ஹாமில் இருக்கும் Tyseley Industrial Estate-ல் தீ விபத்து ஏற்பட்டதால், சுமார் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்து காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் புகைகள் பரவுவதை பார்க்க முடிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அங்கிருப்பவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், West Midlands தீயணைப்பு துறை தன்னுடைய டுவிட்டர் பதிவில், தீ விபத்து காரணமாக Tyseley Industrial Estate பகுதியில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தன.


தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் முயற்சித்து வருவதால், தீ விபத்து பகுதிக்கு அருகில் இருக்கும் குடியிருப்பாளர்கள்,

கதவு மற்றும் ஜன்னல்களை மூடியிருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.

தீ விபத்து எதனால் ஏற்பட்டது, அல்லது யாராவது காயமடைந்திருக்கிறார்களா என்பது இன்னும் தெரியவில்லை.

யாரும் காயமடையவில்லை என்று நம்புவதாக, குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்பகுதியை பொதுமக்கள் இப்போதைக்கு தவிர்க்கும் படியும், இதற்கு மாற்றுப்பாதையை தெரிவு செய்து செல்லும் படி கூறப்பட்டுள்ளது.