ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!!

948

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை விதிமுறைகளை மீறி பள்ளி கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

2019 – 20 க்கான நிலுவைக் கட்டணம், 2020- 21ஆம் கல்வி ஆண்டுக்கான கட்டணங்களை செலுத்ததுமாறு பெற்றோர்களை தனியார் பள்ளிகள் வற்புறுத்தக் கூடாது.


கல்விக் கட்டணம் மட்டும் அல்லாமல், இணையவழியில் கல்வி கற்பிப்பதற்கு என்று கூறி ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் எச்சரித்துள்ளார்.