கேரள விமான விபத்து: விமானியின் தவறான முடிவே காரணம்? கருப்புப் பெட்டியில் தெரியவந்த தகவல்!!

369

கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு 190 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது.

இதில் இரண்டு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.விமானத்தின் கருப்புபெட்டி மீட்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கரிப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ‘அலட்சியத்தினால் ஏற்பட்ட விபத்து’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே விமானி என்ஜினை நிறுத்திவிட்டதாகவும், அதானல் விமானத்தில் தீப்பிடிப்பது தடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.


ஆனால் அது உண்மையில்லை என நிபுணர்கள் மறுத்துள்ளனர், அதுமட்டுமல்லாது விமானம் 35 அடியிலிருந்து விழுந்து இரண்டாக உடையும் வரை என்ஜின் இயங்கியிருக்கிறது என தெரிவித்துள்ளனர். மேலும் மேற்குப்புறம் உள்ள 10ம் எண் ஓடுதளத்தை விமானி தன்னிச்சையாக தெரிவு செய்ததும் விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.

முதலில் கிழக்குப்புறம் உள்ள 28ம் எண் ஓடுதளத்தில் தரையிறங்க முயன்று முடியாமல் போனதால் 10ம் எண் ஓடுதளத்தை விமானி தன்னிச்சையாக தெரிவு செய்துள்ளார். போயிங் 747 – 800 ரக விமானம் 15 நாட்டிகல் மைல் காற்று வேகத்திலும் தாக்குப்பிடிக்கும் என்பதால் விமானி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

ஆனால், விமானி எதிர்பார்த்தபடி விமானத்தின் வேகம் குறையவில்லை. அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. விபத்தைத் தவிர்க்க மீண்டும் டேக் ஆஃப் செய்ய முயற்சி செய்துள்ளார். விமானியின் இந்த அதீத தன்னம்பிக்கையே விமான விபத்துக்குக் காரணம் என்று கருப்புப்பெட்டி மூலம் தெரியவந்துள்ளது.

இன்று மட்டும் 85 பேர் டிஸ்ஜார்ஜ் விபத்து நடந்ததில் காயமடைந்த 23 பேர் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 149 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் இன்று வரை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 85 பயணிகள் பூரணகுணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

காயம் அடைந்த பயணிகளுக்கான சிகிச்சை செலவு அனைத்தையும் கேரள அரசு ஏற்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.