பிஞ்சு மகனுடன் வெளியே சென்ற தாயார் ஐந்து நாட்களில் சடலமாக மீட்பு: சிறுவனை தேடும் பொலிஸ்!!

448

இத்தாலிய பிராந்தியமான சிசிலியில் 4 வயது மகனுடன் ஷூ வாங்க சென்ற தாயார் நான்கு நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான சிறுவனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நீண்ட பத்து நாட்களாக மாயமான 4 வயது சிறுவன் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில், இந்த வழக்கு தொடர்பில் பொலிசார் குழப்பத்தில் உள்ளனர். விசாரணையின் ஒருபகுதியாக மீட்கப்பட்ட கண்காணிப்பு கமெரா காட்சிகளில், 43 வயதான

விவியானி பாரிசி தமது நான்கு வயது மகன் Gioele உடன் ஆகஸ்டு 3 ஆம் திகதி மகனுக்கு ஷூ வாங்கும் பொருட்டு தமது காரில் புறப்படுகிறார். காலை 9.30 மணிக்கு புறப்பட்ட வாகனம் கரோனியா சுரங்கப்பாதை அருகே சுமார் 11.05 மணிக்கு லேசான விபத்தில் சிக்குகிறது. ஆனால் அதன் பின்னர் விவியானி மற்றும் சிறுவன் Gioele அங்கிருந்து எங்கே சென்றார்கள் என்ற தகவல் இதுவரை இல்லை.

ஆனால், விபத்துக்கு பின்னர் தமது வாகனத்தை அங்கேயே விட்டுச் சென்ற விவியானி, சுரங்கப்பாதை வழியாக விரைந்து, சாலையைக் கடந்து கரோனியா வனப்பகுதிக்குள் நுழைந்ததாக சிலர் சாட்சியம் அளித்துள்ளனர்.


இந்த நிலையில் ஆகஸ்டு 8 ஆம் திகதி கரோனியா வனப்பகுதியில் இருந்து விவியானி சடலமாக மீட்கப்பட, அவருடன் இருந்ததாக கூறப்படும் நான்கு வயது Gioele மாயமாகியுள்ளார்.

கரோனியா சுரங்கப்பாதையில் விபத்துக்கு பின்னர் விவியானி தம்முடன் அலைபேசி, பணம் என எதையும் எடுத்துச் செல்லவில்லை என தெரியவந்துள்ளது. விவியானியின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில், அவரது திருமண மோதிரத்தால் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.

விவியானி கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் மிருகங்களால் உணவாக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. மட்டுமின்றி விவியானியின் ஒரு கை பெயர்க்கப்பட்டு பல இடங்களில் துண்டுகளாக சிதறிக்கிடந்தன.

அவரது கால்கள், மார்பு மற்றும் முதுகெலும்புகளில் எலும்பு முறிவுகளும் காணப்பட்டன. இதனிடையே, மின் கம்பம் ஒன்றின் அருகாமையில் விவியானியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதால்,

அவர் மின்சாரம் தாக்கி இறந்தாரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. ஆனால் சிறுவன் Gioele மாயமாகியுள்ளதால், விவியானியை கொலை செய்துவிட்டு, சிறுவனை கடத்தினார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது இந்த வழக்கு இத்தாலி பொலிசாரை கடும் குழப்பத்தில் கொண்டு சேர்த்துள்ளது.