32 வயசு வித்தியாசம்.. கல்யாணம்னு ஒன்னு நடந்தா அவருகூட தான்… ஆசிரியரை காதலித்து கரம்பிடித்த கல்லூரி மாணவி!!

18562

பாகிஸ்தான்…

பொதுவாக காதலுக்கு வயது இல்லை என பலரும் சொல்வதை கேட்டிருப்போம். அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தன்னுடைய ஆசிரியரையே காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

20 வயதான சோயா நூர் பிகாம் படித்து வருகிறார். இவருடைய ஆசிரியர் சஜித் அலி. 52 வயதான சஜித்திடம் காதல் கொண்ட சோயா, ஒருமுறை தனது காதலை அவரிடம் சொல்லியிருக்கிறார்.

ஆனால், இருவருக்கும் இடையேயான வயதை காரணம் காட்டி சோயாவின் காதலை ஏற்க மறுத்துவிட்டார் சஜித். இருந்தாலும் தன்னுடைய முடிவில் இருந்து மாறாத சோயா, தொடர்ந்து அவரை காதலித்து வந்திருக்கிறார்.


ஒருகட்டத்தில் சஜித்திற்கும் சோயா மீது காதல் வரவே, இருவரும் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். முதலில் இருவரும் தங்களது குடும்பத்தினரிடம் தங்களது காதல் குறித்து தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால், இருவீட்டாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இருப்பினும் தங்களது முடிவில் இருந்து மாறாமல் இருந்ததாகவும் இந்த தம்பதி தெரிவித்திருக்கின்றனர்.

அண்மையில் யூடியூப் சேனல் ஒன்று இந்த தம்பதியை பேட்டி எடுக்கவே, இவர்களது காதல் கதை வெளியுலகத்திற்கு தெரியவந்திருக்கிறது. அதில், சோயா பேசும்போது, தான் சஜித் பாடம் நடத்தும் விதத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகவும்,

அதுவே அவர்மேது காதல் மலர காரணமாகவும் இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். தனது மனைவி பற்றி பேசிய சஜித்,”அவர் (சோயா) சமைக்கும் உணவுகள் மற்றும் தேநீருக்கு மிகப்பெரிய ரசிகன் நான்” என்றார்.

தற்போது ஆன்லைன் கோச்சிங் கொடுத்துவரும் சோயா, தான் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானில் அதிக வயது வித்தியாசம் கொண்ட நபர்கள் திருமணம் செய்துகொள்வது இது முதல்முறை அல்ல.

சமீபத்தில் முஸ்கான் என்ற 18 வயது இளம்பெண் ஃபரூக் முகமது என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அகமதுவிற்கு 55 வயது என்பது குறிப்பிடத்தக்கது.