இணையத்தில் 6 வயது சிறுவன் வாங்கிய ராட்சத லொறி: சிக்கலில் பிரித்தானிய தந்தை..!

620

பிரித்தானியாவில் 6 வயது சிறுவன் தவறுதலாக வாங்கிய ராட்சத லொறியால், கடன் வசூலிப்பாளர்களால் சிறுவனின் தந்தை தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறார்.

வடக்கு டைன்சைட், வால்சென்ட் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான முகமது ஃபராஜி. இவரது 6 வயது மகனே இணையம் வாயிலாக சுமார் 19,000 பவுண்டுகள் மதிப்பிலான ராட்சத லொறியை வாங்கியுள்ளார்.

சம்பவத்தன்று ஃபராஜி, தமது மடிக்கணினியை பூட்டாமல் விட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் ராட்சத லொறி பொம்மைகள் மீது அலாதி பிரியம் கொண்ட சிறுவன் அரியோ, தந்தையின் PayPal கணக்கு மூலம் சுமார் 19,000 பவுண்டுகளுக்கான லொறியை வாங்கியுள்ளார்.

தமது மகன் தவறுதலாக அந்த லொறியை வாங்கியதாக ஃபராஜி விளக்கமளித்தும், விற்பனையை ரத்து செய்ய மறுத்த அந்த நிறுவனம், வந்து லொறியை கைப்பற்ற வலியுறுத்தியுள்ளது.


PayPal நிறுவனமோ, தங்களுக்கு மொத்த பணமும் செலுத்தியே ஆக வேண்டும் எனவும், அல்லது லொறியை விற்பனைக்கு வைத்துள்ள நிறுவனத்துடன் கலந்துபேசி பிரச்சனையை தீர்த்துக்கொள்ள பாருங்கள் என பதிலளித்துள்ளது.

இதுவரை தாம் PayPal கணக்கில் 20 பவுண்டுகளுக்கு மேல் எந்த பொருளும் வாங்கியதே இல்லை என தெரிவித்துள்ள ஃபராஜி,

எனது வங்கிக் கணக்கை பரிசோதித்தால் தெரியும், என்னிடம் மொத்தமிருக்கும் தொகை எவ்வளவு என்று. சிறுவன் அரியோவை இனிமேல் தந்தையின் மடிக்கணினியை தொடக்கூடாது என தடை விதித்துள்ளனர்.

ஆனால் சிறுவனுக்கு தாம் வாங்கிய லொறியின் மதிப்பு, அல்லது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. மார்ச் மாதம் நடந்த இந்த விவகாரம் தொடர்பில் ஃபராஜி தொடர்ந்து போராடி வருகிறார்.