பிரான்சில் பேருந்தில் வந்த 3 பேரின் பையை சோதித்த போது பொலிசார் கண்ட காட்சி…! அதிர்ச்சி தகவல்..!!

327

பிரான்ஸ் தலைநகரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கொள்ளையடித்துவிட்டு, பேருந்தில் தப்பி ஓட முயற்சித்த அரங்கேறியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் 19-ஆம் வட்டாரத்தில், கடந்த வியாழக் கிழமை RATP-ன் பேருந்தில் la place Armand Carrel பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, பேருந்தின் உள்ளே இருந்த மூன்று பேர் சந்தேகித்திற்கிடமான சில பொதிகளை வைத்துக் கொண்டு பயணித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அவர்கள் கொள்ளையிட்ட பொருட்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்த நபர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார்.

அந்த நேரத்தில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாரிய அளவுடைய பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக பொலிசாருக்கு புகாரும் வந்துள்ளது.


இதனால் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வர, இப்படி ஒரு தகவல் கிடைத்ததால், பொலிசார் உடனடியாக அப்பேருந்து செல்லும் பகுதிக்கு சென்று, பேருந்தை மறித்து உள்ளே சென்றுள்ளனர்.

அப்போது பேருந்தின் உள்ளே இருந்த மூவரையும் விசாரித்த போது, அவர்கள் வைத்திருந்த பையில் கணிணி, நகை, பணம் மற்றும் விலையுயர்ந்த தொலைப்பேசிகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதற்கான ஆவணம் எதுவும் அவர்களிடம் இல்லாததால், பொலிசார் அவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன் பின் அங்கு மேற்கொண்ட விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பொலிசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.