கனடாவில் நீர் வீழ்ச்சியில் சிக்கிய இளைஞனை காப்பாற்ற போராடும் குழுவினர்! கமெராவில் சிக்கிய திக் திக் காட்சி..!

364

கனடாவில் நீர்வீழ்ச்சிக்கிடையே சிக்கிய இளைஞரை சாதூர்யமாக மீட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கனடாவின் Burnaby-வை சேர்ந்த Hossam Mohamed மற்றும் Mona Eldahan என்ற தம்பதி தங்களுடைய 33-வது ஆண்டு திருமண நாளிற்காக Vancouver தீவில் உள்ள Nymph நீர்வீழ்ச்சியில் இருக்கும் பூங்காவிற்கு சென்றுள்ளனர்.

அப்போது நீர் வீழ்ச்சியில் சிக்கிய இளைஞனை சிலர் உதவியுடன் மீட்க முயல்வதை கண்டுள்ளனர். பாறைகள் நிறைந்த நீர் வீழ்ச்சியில் குறித்த இளைஞனைக் காப்பாற்ற போராடியுள்ளனர்.

நீர்வீழ்ச்சியின் நடுவில் சிக்கிக்கொண்ட அந்த இளைஞனுக்கு மீட்க முயற்சி செய்யும் நபர்கள் முதலில் ஒரு கயிற்றை தருகின்றனர்.


ஆனால், அதை அந்த இளைஞனால் பிடிக்க முடியவில்லை. ஏனெனில் அது மிகவும் சிறியதாக இருந்ததால், இளைஞனால் பிடிக்கமுடியவில்லை. இதையடுத்து இரண்டு கயிறுகளை கட்டி இளைஞன் மீது வீச, உடனடியாக அந்த நபர் கயிற்றை பிடித்து தன்னுடைய இடுப்பில் கட்டிக் கொள்கிறார்.

அதன் பின் அந்த இளைஞனை குதிக்கும் படி மீட்பவர்கள் கூற, உடனே அவரும் தண்ணீரின் உள்ளே குதித்தவுடனே கயிற்றை இழுத்து, காப்பாற்றுகின்றனர்.

நீர் வீழ்ச்சிக்கும் வெளியில் இருந்த மக்கள் ஓ கடவுளே ஓ கடவுளே என்று ஒருவித பதற்றத்துடன் பார்த்து கொண்டிருக்க, இளைஞன் காப்பாற்றப்பட்டவுடன் கை தட்டி பாராட்டினர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.