சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து… பலர் பலி: பணக்கட்டுகளை அள்ளிச்சென்ற மக்கள்..!

401

தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவிற்கு அருகிலுள்ள விமான நிலையத்திலிருந்து தென்மேற்கு ஏவியேஷனின் ஏஎன்-26 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து தீப்பிடித்தது.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பகல் 9 மணிக்கு நடந்த குறித்த விபத்தில் 15 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் என மொத்தம் 17 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விமான நிலைய இயக்குனர் குர் குவோல், விமான விபத்தை உறுதிப்படுத்தினார், ஆனால் இறப்பு எண்ணிக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


மேலும் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம், உணவு, வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றை விமானம் கொண்டு சென்றதாக அவர் உறுதி செய்துள்ளார்.

விமானம் தீப்பிடித்துக்கொண்டிருந்தபோது அதிலிருந்த பணத்தை அப்பகுதியினர் எடுத்துச்சென்றனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன, ஆனால் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.