சாம்பியன் லீக போட்டியில், PSG அணி தோல்வியடைந்ததை அடுத்து, சோம்ப்ஸ் எலிசேயில் பலத்த வன்முறை வெடித்தது.
பிரான்சில் சாம்பியன் லீக் போட்டியில் PSG அணி தோல்வியடைந்ததை அடுத்து, சோம்ப்ஸ் எலிசேயில் பலத்த் வன்முறை வெடித்தது.
வாகனங்கள் எரித்தும் கடைகளை சூறையாடியும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
முன்னதாக இச்சம்பவத்தில் 22 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 148 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காவல்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில், காவல்துறையினர் மீது கண்ணாடி போத்தல்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவத்தில் 16 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு உள்துறை அமைச்சர் Gérald Darmanin கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வன்முறை காரணமாக அடுத்த முறை 15 வாகனங்கள் எரியூட்டப்பட்டும், 12 கடைகள் சூறையாடப்பட்டும் உள்ளன.