கிரீஸ்-க்கு சுற்றுலா சென்ற போது செய்த செயல்… பொதுவெளியில் மன்னிப்பு கோரிய நெதர்லாந்து மன்னர்-ராணி!

442

கிரீஸ் நாட்டிற்கு விடுமுறைக்கு சென்றிருந்த போது கொரோனா வைரஸ் சமூக இடைவெளி விதிகளை மீறியதை காட்டும் புகைப்படம் வெளியானதை அடுத்து நெதர்லாந்து மன்னரும் ராணியும் மன்னிப்பு கோரியுள்ளனர்.

இணையத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில், மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோர் மைக்கோனோஸ் தீவில் ஒரு உணவக உரிமையாளர் என்று கூறப்பட்ட நபருடன் நெருக்கமாக இருப்பதைக் காட்டியது.

ஊடகங்களில் வெளியான புகைப்படத்தில் நாங்கள் மிகக் குறைந்த சமூக இடைவெளியை கடைபிடித்திருந்தோம்.


அந்த நேரத்தில் தன்னிச்சையாக சமூக இடைவெளி விதிகளில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை என்று மன்னர் மற்றும் ராணி ட்விட்டரில் தெரிவித்தனர்.

நிச்சயமாக, நாங்கள் சமூக இடைவெளியை கடைபிடித்திருக்க வேண்டும்.

ஏனென்றால் விடுமுறை நாட்களிலும், வைரஸை வெல்வதற்கு விதிகளை மதிக்க வேண்டியது அவசியம் என நெதர்லாந்து மன்னரும் ராணியும் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.