10 நாளில் மகளுக்கு திருமணம்.. காதலனுடன் ஓட்டம் பிடித்த அம்மா… மகளின் திருமண நகைகளும் அபேஸ்!!

120018

உத்தரகண்ட் மாநிலத்தில்..

திருமணத்தைச் செய்து பார், வீட்டைக் கட்டிப்பார் என பொதுவாகச் சொல்வார்கள். இரண்டுமே எந்தளவுக்குக் கஷ்டமான ஒன்று என்பது இந்த இரண்டையும் செய்தவர்களுக்கு நன்கு தெரியும். அதிலும் குறிப்பாகத் திருமணத்தில் பெற்றோர்கள் பாடு பெரும்பாடு தான்.

மாப்பிள்ளை பார்ப்பது தொடங்கி மண்டபம், பத்திரிக்கை, உணவு எனச் செய்ய வேண்டிய பணிகள் நீண்டு கொண்டே போகும். திருமணம் முடியும் வரை பெற்றோர்களுக்குத் தூக்கம் என்பதே கிட்டதட்ட இருக்காது எனச் சொல்லலாம்.

அந்தளவுக்குத் திருமணம் என்பது பெற்றோருக்குப் பெரிய வேலையைத் தரும் ஒன்று. திருமண ஏற்பாடுகளைச் செய்யப் பெற்றோர் ஓடி ஓடி உழைப்பதைத் தான் நாம் பார்த்திருப்போம்.


ஆனால், திருமணத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு பெண்ணின் தாயாரே ஓடிவிட்டார். உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூர் கோட்வாலி பகுதியில் தான் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.

அதாவது பெண்ணின் திருமணத்திற்கு 10 நாட்களே இருந்த நிலையில், பெண்ணின் தாயார் மற்றொரு இளைஞருடன் ஓடிவிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதில் மற்றொரு வினோதமான விஷயம் என்னவென்றால், காதலனுடன் ஓடும்போது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த அத்தனை நகைகளையும் அந்த தாய் எடுத்துச் சென்றுவிட்டார்.

இதனால் என்ன செய்வதென்றே புரியாமல் குழம்பிய உறவினர்கள், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மங்களூர் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 38 வயதான பெண்தான் தனது மகளின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்து பொது தனது காதலருடன் ஓடிவிட்டார்.

அவர்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் அப்போது தான் அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மகளுக்கு 10 நாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில், பல லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் அந்த பெண் காதலனுடன் ஓடிவிட்டார்.

இப்போது காதலனுடன் ஓடிய பெண்ணின் கணவர் ஓராண்டுக்கு முன் உயிரிழந்துவிட்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளுக்குத் திருமணம் செய்து வைக்க அந்த பெண் ஏற்பாடு செய்துள்ளார். வரும் டிச.14ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது.

திருமணத்திற்கு 10 நாட்களே இருந்த நிலையில், திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது. அனைத்து உறவினர்களுக்கும் திருமண பத்திரிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. சில நாட்களில் திருமணம் நடக்க இருந்ததால் நெருங்கிய உறவினர்கள் கூட வரத் தொடங்கிவிட்டனர்.

இந்தச் சூழலில் தான் கடந்த சனிக்கிழமை இரவு மணப்பெண்ணின் தாயார் திடீரென மாயமானார். முதலில் அருகில் தான் எங்காவது சென்றிருப்பார் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், நீண்ட நேரமாகியும் திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் தேட தொடங்கியுள்ளனர்.

அப்போது தான் மணப்பெண்ணின் தாயாருக்கு இளம் வயதில் காதலன் ஒருவன் இருப்பதும் அவனும் காணாமல் போனதும் உறவினர்களுக்குத் தெரிய வந்தது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சி வீட்டிலேயே காத்திருந்தது. அதாவது வீட்டில் இருந்த லட்சக்கணக்கான பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதையும் உறவினர்கள் கண்டுபிடித்தனர்.

அதன் பின்னரே நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர்கள் போலீசாரிடம் இது தொடர்பாகு புகார் அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி போலீஸ் அதிகாரி ராஜீவ் ராவுத்தன் கூறுகையில், “அந்த இளைஞனுடன் பெண் ஓட்டம் பிடித்துள்ளார்.

அந்த பெண்ணின் மகளுக்கு டிசம்பர் 14ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மகளின் திருமணத்திற்கு இருந்த நகைகளையும் அந்த பெண்டு எடுத்துச் சென்றுவிட்டார். அந்த பெண்ணும் அவரது காதலனும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்தனர்.

அப்போது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.