இது ஒரு புதிய வகை கொரோனா வைரஸ்… இங்கிருந்து பரவவில்லை! உறுதியாக கூறும் சீனாவின் வெள்வால் பெண்..!

361

சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை என்றும், இது ஒரு புதிய ரக கொரோன வைரஸ் என்று வைரஸியல் நிபுணர் ஷி ஜெங் லி தெரிவித்துள்ளார்.

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என்று ஒரு சில நாடுகளின் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனால் சீனாவிற்கும், அந்த நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா இதை சீனா வைரஸ் என்றே கூறிவிட்டது.

இதன் உண்மையை கண்டுபிடிக்காமல் விடமாட்டோம், சீனாவின் முகத்திரையை கிழிப்போம் என்று டிரம்ப் திட்டவட்டமாக கூறிவிட்டார்.


இந்நிலையில், சீனாவில் இருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு வெளவால் பெண் என்றழைக்கப்படும் வைரஸியல் நிபுணர் ஷி ஜெங் லி, இந்த வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்து பரவியது என்று கூறினால், அது முற்றிலும் பொய்.

ஜனவரி மாதத்தின் துவக்கத்தில் இந்த வைரஸின் மரபணு வரிசையை நாங்கள் ஆராய்ச்சி செய்த போது, எங்களிடம் இருந்து மாதிரிகளின் மரபணு தொகுதியுடன் ஒத்துப்போகவில்லை. இதனால் இது புதிய ரக கொரோனா வைரஸ் என்பதை உறுதி செய்தோம்.

வூஹான் வைரஸியல் கழகத்தில் உள்ள பி3 ஆய்வகம் 10 ஆண்டுகளாகவும், பி4 ஆய்வகம் 2 ஆண்டுகளாகவும் இயங்கி வருகிறது. மிகவும் பாதுகாப்பாக உள்ளது; இதுவரை எவ்வித கசிவும் ஏற்படவில்லை என்பதை புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன.

டிரம்ப் போன்ற அமெரிக்க அரசியல்வாதிகள் கூறுவதெல்லாம் பொய், அரசியல் ஆதாயத்துக்காக அவர்கள் இத்தகைய புரளியைப் பரப்புகின்றனர் என்று கூறியுள்ளார்.