பிரித்தானியாவில் பட்டப்பகலில் ஐந்து வயது மகன் கண் முன்னால் தாய் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளான்.
பிரித்தானியாவின் Manchester-ன் Withington-ல் இருக்கும் Rudheath குடியிருப்பு வீதியில் கடந்த 29-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி 1.30 மணியளவில், ஐந்து வயது மகனுடன் பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அடையாளர் தெரியாத நபர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை பொலிசார் வெளியிட்டு அந்த நபரை கண்டுபிடிக்க மக்களின் உதவியை கோரியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பான கொலை முயற்சி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Great Manchester காவல்துறையின் மான்செஸ்டர் மாவட்டத்தைச் சேர்ந்த DI John Robb கூறுகையில், இது ஒரு கொடூரமான தாக்குதல், அதில் பெண் ஒருவர் தன்னுடைய மகன் கண்முன்னால் தாக்கப்பட்டுள்ளார்.
இது ஒரு தனிப்பட்ட தாக்குதல் என்று நம்பப்படுவதாகவும், இந்த கொலை முயற்சி தொடர்பாக நாங்கள் தற்போது வேறு யாரையும் தேடவில்லை என்று மக்களுக்கு உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார். நாங்கள் ஒருவரை கைது செய்திருந்தாலும், இந்த தாக்குதலின் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது குறித்து முழு விசாரணையில் இறங்கியுள்ளோம்.
அதிகாரிகளின் விசாரணைகளுக்கு உதவக்கூடிய ஏதேனும் தகவல் உங்களிடம் இருந்தால், தயவுசெய்து பொலிசாரை தொடர்பு கொள்ளுப் படி கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவம் காரணமாக சிறுவனின் தாயாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் நல்ல நிலையில் இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் அந்த சிறுவன், குறித்த பெண்னை ஏன் தாக்கினார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை, அடுத்தடுத்த விசாரணைக்கு பின்னரே இந்த சம்பவம் குறித்த முழு தகவல் தெரியவரும். இருப்பினும் நாட்டில் பட்டப்பகலில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அப்பகுதி மக்களிடையே ஒரு வித பயத்தை ஏற்படுத்தியுள்ளது.