வாழ்க்கை விரக்தி… 250 அடி பள்ளத்தில் மனைவி, குழந்தைகளும் காரை கவிழ்த்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

2966

அமெரிக்கா..

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் தர்மேஷ் பட்டேல், டெவில் ஸ்லைடு என்ற செங்குத்து பாறைகள் நிறைந்த, அதிக ஆபத்தான பகுதிக்கு, தனது மனைவி, 9 வயது மகன் மற்றும் 4 வயது மகள் ஆகியோருடன் டெஸ்லா காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்திய வம்சாவளியான தர்மேஷ் (41) குடும்பத்தோடு பாறைகள் நிறைந்த டெவில் ஸ்லைடு மலை பகுதி வழியே சென்றுள்ளனர். திடீரென தறிகெட்டு ஓடிய கார் அந்த பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்,

2 குழந்தைகளையும் மீட்டு, மேலே கொண்டு வந்தனர். ஹெலிகாப்டர் குழு ஒன்று பறந்து சென்று அந்த தம்பதியை மீட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.


இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பட்டேல் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார் என போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியான தகவலை தெரிவிக்கின்றது.

அதற்கு முன் தினம் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து மோதலுக்கு பழி வாங்கும் விதமாக குடும்பத்தோடு சேர்ந்து இறப்பதற்கு முடிவு செய்திருந்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து கலிபோர்னியாவின் வனம் மற்றும் தீயணைப்பு துறையைச் சேர்ந்த உயரதிகாரி பிரையன் பொடிங்கர் கூறுகையில், இது போன்ற உயரம் நிறைந்த பகுதியில் இருந்து கீழே விழுந்த பின் உயிர் பிழைப்பது கடினம்.

அந்த குழந்தைகளுக்கு லேசான அளவிலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் மீட்க சென்ற போது, காரில் உயிர் பிழைத்து இருந்தவர்களை பார்த்து உண்மையில் அதிர்ச்சி அடைந்தோம். அதன் பின்னரே, எங்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது என்றார்.

போலீசாரின் அறிக்கையின்படி, பட்டேல் மீது கொலை மற்றும் குழந்தைகளைத் துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் சான் மேதியோ கவுன்டி சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் என்றனர்.