Friday, March 14, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1321 POSTS 0 COMMENTS
வேட்பாளர் படம் பிரசுரித்த சாக்லேட்டுகள் தயாரித்து கொடுக்கும் கேரள பெண் ஒருவருக்கு பல மாநிலங்களில் இருந்து ஓர்டர்கள் குவிந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவரும் விதமாக வேட்பாளர்கள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்துவார்கள். அதாவது, கால்களில் விழுவது, கை கூப்பி கும்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தில் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டும் வேட்பாளர்களின் படங்களை சாக்லேட் கவர்களில் பிரிண்ட் செய்து வரவேற்பை...
பிரபல தொழிலதிபர் குடும்பத்துடன் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி தற்கொலைக்கு முன் மனைவி விசித்ரா தனது டைரியில் கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் ‘‘என் கணவர் ராமச்சந்திரன் கோபத்தினால் எங்களுக்கு அதிக பாதிப்புகள் தொடர்ந்து வருகின்றன. அவர் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை....
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா நஞ்சப்புரா பகுதியில் வசித்து வருபவர் 24 வயது ஹர்ஷித். இவர் துமகூருவை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அந்த பெண்ணை, அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஹர்ஷித்திற்கு பல புதிய எண்களில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. அப்போது பேசிய மர்மநபர், ஹர்ஷித்தின்...
உத்தரபிரதேச மாநிலம் படவுன் நகரில் சலூன் கடை வைத்திருக்கும் முகமது சாஜித் என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணியளவில் தனது பக்கத்து வீட்டு வினோத் தாக்கூர் என்பவரது வீட்டிற்குள் நுழைந்து அவரது மகன்களான 13 வயது ஆயுஷ் மற்றும் 6 வயது அஹான் ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில், இரண்டு சிறுவர்களும் ரத்த வெள்ளத்தில் இறந்தனர். மேலும், வினோத்தின் மூன்றாவது மகன் பியூஷ் சஜித்தை கொலையாளி கடுமையாக தாக்கியுள்ளார்....
நடிகர்கள் முரளி மற்றும் வடிவேலுவுடன் 'சுந்தரா டிராவல்ஸ்' என்ற நகைச்சுவை படத்தில் நடிகை ராதா முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருண் மீது பிரான்சிஸ் ரிச்சர்ட் என்ற இளைஞர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ராதாவும் அவரது மகனும் சேர்ந்து தன்னை தாக்கியதாக சிசிடிவி வீடியோ ஆதாரத்துடன் பிரான்சிஸ் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து...
தன்னை திருமணம் செய்ய மறுத்த அக்கா மகளை துடிக்க துடிக்க கொலை செய்த தாய்மாமனை கர்நாடகா போலீஸார் கைது செய்தனர். பெங்களூர்: கர்நாடகாவில் தனது சொந்த அக்கா மகளையே கொடூரமாக கொலை செய்த தாய்மாமாவை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் ஒன்றும் தெரியாதது போல நடித்த தாய்மாமா போலீஸில் சிக்கியது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம். கர்நாடகா மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள பைசவல்லி...
ஆத்திரத்தில் மகளை கொலை செய்த தாய், அதன்பிறகு செய்வதறியாமல் மகள் தற்கொலை செய்ததாக நாடகமாடி இருக்கிறார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை என்ற கோணத்தில் விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள். ஆந்திர பிரதேசம் மாநிலம் இப்ராஹிம்பட்டினத்திலேயே இந்த கொடூர செயல் நடந்திருக்கிறது. தான் பார்த்த மாப்பிள்ளையை மணக்கமறுத்த மகள் வேறொருவரை காதலிப்பதை அறிந்ததும் ஆத்திரப்பட்ட தாய் அவரை கொலை செய்திருக்கிறார். கொலை செய்தது மட்டுமல்லாது அதனை மறைக்க...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் வசித்து வருபவர் 43 வயது கிஞ்சல் ஷா. மருத்துவரான இவர் தனது தந்தையுடன் வசித்து வந்தார். இவர் மார்ச் 18ம் தேதி வீட்டருகே டாக்சியில் ஏறி பயணம் செய்தார். சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட மும்பை - நவிமும்பை அடல் சேது கடல் பாலம் வழியாக செல்லுமாறு டிரைவரிடம் தெரிவித்தார். அதன்படி டாக்சி டிரைவர் கடல் பாலம் வழியாக டாக்சியை ஓட்டி சென்றார். பாலத்தில் நடுவழியில்...
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், அரசிகெரே தாலுகாவில் உள்ள கொல்லரஹத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கப்பா. இவரது மனைவி சைத்ரா. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான சங்கரலிங்கப்பாவுக்கு குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சங்கரலிங்கப்பா குடிப்பதற்காக கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியது தெரியவந்தது. இந்த கடனை திருப்பி செலுத்துவது தொடர்பாக சங்கரலிங்கப்பாவுக்கும், சைத்ராவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த மார்ச் 14ம் தேதி வீட்டில் சைத்ரா...
விழுப்புரம் அருகே மலட்டாற்றில் இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டார். அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் பகுதியில் ஓடும் மலட்டாற்றின் கரையில் நேற்று மாலை பெண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் கரிக்கட்டையாகி கிடந்தார். இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு...