Friday, April 4, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1362 POSTS 0 COMMENTS
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் வசித்து வருபவர் கஜேந்திரன். இவர் வீட்டின் முன் பகுதியில் கட்டட விரிவாக்க பணியை மேற்கொண்டு வருகிறார். புதிதாக கட்டப்பட்ட சுவற்றின் அருகே மின்சாதன மீட்டர் பெட்டி அமைந்துள்ளது. இங்கு விரிவாக்க பணி நடந்த கொண்டிருக்கும் நிலையில் தண்ணீர் நனைக்கும் பொருட்டு கஜேந்திரன் மகன் 30வயது வேலாயுதம் மோட்டாரை இயக்க முற்பட்ட நிலையில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியது. இங்கு வேலாயுதத்தின்...
ரயில் மோதி 2 பேர் பலியான விவகாரத்தில், தகாத உறவு அம்பலமானதால் கல்லூரி மாணவியும், தனியார் பஸ் டிரைவரும் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. தேனியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் குன்னூர் கிராமம் உள்ளது. இங்குள்ள வைகை ஆறு ரயில்வே பாலம் அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக தேனி ரயில்வே எஸ்ஐ இர்வினுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரயில்வே...
கோதமங்கலம் அருகே வீட்டிற்குள் ஆதிவாசி பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் மாமலைக்கண்டம் அருகே எளம்பளாசேரியை சேர்ந்த ஆதிவாசி பெண் மாயா (37). இவர், ஏற்கனவே திருமணம் முடித்து குடும்ப பிரச்னை காரணமாக கணவர், குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக எளம்பளாசேரியில் வாடகை வீட்டில் வசிந்து வந்தார். கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் இவருக்கு...
துருக்கியில் வசித்து வரும் டிக்டாக் பிரபலம் எபெகான் குல்தூர் . இவருக்கு வயது 24 மட்டுமே. இவர் அதிக உடல் பருமன் காரணமாக பல்வேறு மருத்துவ சிக்கல்களை எதிர்கொண்டு வந்தார். இதனால் கடந்த 3 மாதமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எபெகான் சாப்பாடு குறித்த வீடியோக்களை பதிவு செய்து ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக எபெகான்...
கரூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், மாணவியை மினி வேனில் கடத்திச் சென்ற இளைஞர், அவரது தாய் மற்றும் நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் ஈசநத்தம் அருகேயுள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் நந்தகோபால் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இவரது காதலை மாணவி நிராகரித்ததாக கூறப்படுகிறது....
தனது வீட்டில், டிவியில் இந்திய அணி, சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்ததை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்த 14 வயது மாணவி, திடீரென மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் சிறுமிக்கு வேறு எந்த உடல்நலக் கோளாறுகளும் இதுவரை ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. துபாயில் நடைபெற்ற சாம்பியன் டிராபி கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை தோற்கடித்து கோப்பையைக்...
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் சாலைவசதிகள் இன்னும் சரியாக அமைக்கப்படவில்லை இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை டோலி கட்டி சுமார் ஆறு கிமீ தூரம் ஆபத்தான ஒற்றையடி பாதையில் கிராம மக்கள் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் மாரியம்மாள் என்ற பெண் இதே போல டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர்...
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் துங்கபத்ரா நதியில் கடந்த மார்ச் 6ம் தேதி இளம்பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. முதலில் அடையாளம் தெரியாத மரணம் எனக் கருதப்பட்டது. இதன் பிறகு பிரேத பரிசோதனையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தினர். சில நாட்கள் கழித்து, மரணமடைந்த பெண் 22 வயதான சுவாதி என்ற மாணவி. அவர் ஹாவேரி மாவட்டத்தின் ரட்டிஹள்ளி தாலுகா...
அத்தனை அழகாய் இருக்கிறார்கள். எப்படித் தான் கொல்ல மனசு வந்ததோ? தனது இரட்டைக் குழந்தைகளை கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி வாயில் துணியைத் திணித்து கொலைச் செய்திருக்கிறார் பெற்ற தாய். உத்திரகான்ட் மாநிலம் ஹரித்துவார், ஜ்வாலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் ஒருவர், திருமணம் முடித்து கணவர், 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இரட்டை குழந்தைகளான இருவரும் ஆறு மாத கைக்குழந்தைகள். இந்த பெண்மணியின் கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்....
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உதகை அருகே தேயிலை பறிக்க சென்ற பெண் மாயமானார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த அஞ்சலை என்ற பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உதகை அருகே உள்ள பேரார் பொம்மன் நகரில் வசித்து வருபவர் கோபால் இவரது மனைவி அஞ்சலை. இவர் நேற்று முன்தினம் தேயிலை பறிக்க அருகே உள்ள காலிபெட்டா...