Friday, January 10, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1131 POSTS 0 COMMENTS
24 வயது இளம்பெண் ஒருவர் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ததற்காக அவரது குடும்பத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக ரவி பீல் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், அப்பெண்ணை கொலை செய்ய முடிவு செய்தனர். இதையறிந்த காதல் ஜோடி பல்வேறு இடங்களில் தங்கி உயிரை பாதுகாத்து...
கணவனுடன் தொடர்ந்து சண்டை எழுந்து வந்த நிலையில், டாக்டர் மனைவி தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டார். தேனி மாவட்டம் சின்னமனூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் மணிமாலா (38). சின்னமனூர் அரசு மருத்துவமனையில் தோல் சார்ந்த நோய் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணிகண்டன் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஜவுளித் தொழில் தொடர்பாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக்...
சென்னையில் முன்னால் சென்றுக் கொண்டிருந்த கார், எதிர்பாராமல் திரும்பியதில் நிலைத்தடுமாறி ஸ்கூட்டியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவிகள் மீது லாரி மோதியதில், தோழியுடன் ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்திருந்த ஆர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை திருவல்லிக்கேணி டிபி கோவில் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி (23). மாநிலக் கல்லூரியில் வேதியியல் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மாலை ரேணுகாதேவி, தன்னுடன் படிக்கும் தோழி செனாய் நகரை சேர்ந்த ஆர்த்தி (24)...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வின் தேவகுமார். இவரது மகள் பெமிஷா (23). எம்.ஏ பட்டதாரி. இவரும் மேற்கு நெயூரை சேர்ந்த ராமும் (24) காதலித்து வந்துள்ளனர். ராம் (பி.இ) பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினியராக உள்ளார். பெமிஷா தனது காதலன் ராமுடன் குடும்பத்தினருக்கு தெரியாமல் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். மேலும் காதலன் ஊருக்கு வந்ததும் ரகசியமாக சந்திப்பது வழக்கம். இந்த காதல்...
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா ஏகேவி நகரைச் சேர்ந்தவர்கள் ஹரிபாரதிதாஸ்-இந்திரா தம்பதி. இவர்களது மகன் ரோகேஷ் (43). சிங்கப்பூரில் கணினிப் பொறியாளராகப் பணிபுரிந்து வரும் இவருக்கும், கும்பகோணம் பழைய அரண்மனை தெருவைச் சேர்ந்த ராஜன்-நிர்மலா தம்பதியின் இளைய மகள் திவ்யா (35) என்பவருக்கும் கடந்த 15.5.2013 அன்று திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தீப்தா என்ற 6 வயதில் மகள் உள்ளார். நாம்தமிழர் கட்சியின் முக்கிய உறுப்பினரான திவ்யா, 2022ஆம் ஆண்டு...
பழனி லட்சுமிபுரத்தில் வசித்து வருபவர் நஸ்ரின் பாத்திமா( 31). இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த காதர் ரியாஸ் என்ற இளைஞருடன் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் கணவர் காதர் ரியாஸ்ன் அம்மா மற்றும் அக்கா ஆகியோருடன் நஸ்ரின் பாத்திமாவை பழனியில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து விட்டு சென்றுள்ளார். சில நாட்கள் கழித்து நஸ்ரின் பாத்திமாவின் பெற்றோர் கணவர் வீட்டிற்கு...
கர்நாடக மாநிலம் பெங்களூரு தலகட்டபுரா பகுதியில் வசித்து வருபவர் 20 வயது அஞ்சனா. அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இதேபோல் கோனனகுண்டே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (25). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். அஞ்சனா படிக்கும் கல்லூரியில் ஸ்ரீகாந்தும் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஸ்ரீகாந்துக்கும், அஞ்சனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. தனக்கு ஏற்கனவே திருமணமானாலும் அஞ்சனாவை ஸ்ரீகாந்த் காதலித்து...
கேரள மாநிலம் இரட்டி ஆற்றில் இறங்கி செல்ஃபி புகைப்படம் எடுத்த 2 மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம், இரிட்டி பகுதியில் படியூர் பூவம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இரு மாணவிகளின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன. இதில், இருக்கூரில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இடையன்னூரைச் சேர்ந்த உளவியல் மாணவி சஹர்பனா (28), அஞ்சரகண்டியைச் சேர்ந்த சூரியா (21)...
கேரள மாநிலத்தில் அமீபா தொற்றுக்கு 14 வயது சிறுவன் பலியாகி உள்ளான். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வசித்து வரும் மிருதுல் என்ற சிறுவன் அசுத்தமான குளத்தில் குளித்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இச்சிறுவன் அமீபிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ வல்லுனர் குழு உயர்தர சிகிச்சை வழங்கியது. இருந்த போதிலும் சிகிச்சை பெற்று வந்த...
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பகலகுண்டேவில் உடற்பயிற்சி கூடம் உள்ளது. இங்கு சரவாணி (22) என்ற இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். வாடகை வீட்டில் தங்கி தனியாக வசித்து வந்த இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் சரவாணி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரவாணியை சந்திக்க அவரது தாய் மகள் தங்கி இருந்த வீட்டுக்கு வந்தார். அப்போது திருமணம்...