Monday, May 5, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1430 POSTS 0 COMMENTS
இந்தியாவின் டெல்லியில், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஒரு ஜோடி தீம் பார்க் ஒன்றிற்குச் சென்றுள்ளனர். ஆனால், அந்த தீம் பார்க்கில் அந்தப் பெண் மேற்கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி அவரது உயிரை பலிவாங்கிவிட்டது. டெல்லியைச் சேர்ந்த பிரியங்கா என்ற 24 வயது இளம்பெண்ணுக்கு, நிகில் என்பவருடன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. இந்நிலையில், இம்மாதம் 3ஆம் திகதி, இருவரும் தீம் பார்க் ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள். ரோலர் கோஸ்டர்...
இந்தியாவின் மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு பயின்று வந்த 20 வயது பெண் வர்ஷா, நேற்று பிரியாவிடை நிகழ்வில் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். வர்ஷா புன்னகையுடன் தனது பேச்சைத் தொடங்கினார், ஆனால் திடீரென்று அவரது முகம் வெளிறிப்போய், மயக்கமுற்று மேடையில் விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர் வைத்தியாசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால்...
தென்காசி மாவட்டம் இரட்டை குளம் பகுதியில் வசித்து வருபவர்கள் பிரகாஷ்- மீனா தம்பதியினர். இவர்களுக்கு மானஷா (வயது14) என்ற மகள் உள்ளார். சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பள்ளிக்கு சைக்களில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று, காலை மாணவிமானஷா வழக்கம் போல் வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது வகுப்பறையில் தனது நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததாக நிலை...
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் வசித்து வருபவர் 36 வயது பிரியான்ஷா சோனி. இவர், அம்மாநிலத்தில் சைத்ர நவராத்திரியைக் கொண்டாடவும், துர்கா தேவியை வழிபடவும் தயாராகிக் கொண்டிருந்தார். இதற்காக, தனது கணவர் முகேஷ் சோனியிடம் பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரும்படி ஆர்வமாக லிஸ்ட் தயாரித்து கொடுத்துள்ளார். 9 நாள் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, அதாவது சைத்ர நவராத்திரியின் முதல் நாளான மார்ச் 30 அன்று, சோனிக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டது. இதன்...
விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானப் படை பைலட் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்திய மாநிலமான குஜராத், ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் பயிற்சிக்காக சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டது. இந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதில் இருந்த இரண்டு விமானிகள் வெளியேற முடிவு செய்தனர். இதில் ஒரு பைலட் பாராசூட் மூலம் தரையிறங்கி சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், மற்றொரு பைலட்...
இந்திய மாநிலம் பீகாரில் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசருல்லா ஹைதர் (55) என்ற நபர், உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி அஸ்மா கான் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், நசருல்லா வேலை தேடி வந்துள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இருவரும் சண்டையிட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம்...
இந்தியாவில் கடினமான தேர்வான நீட் தேர்வில் 99.99 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற மாணவி யார் என்பதை பார்க்கலாம். இந்தியாவில் மிகவும் போட்டி நிறைந்த நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது எளிதான காரியமல்ல. ஆனால் சில மாணவர்கள் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க கல்லூரிகளில் சேர வேண்டும் என்ற தங்கள் கனவை நனவாக்க படிக்கின்றனர். இந்தியா முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில்...
6 அடி பேருந்தில் 7 அடி உயரமுள்ள இளைஞர் கண்டக்டர் வேலை பார்ப்பதால் கழுத்து வலியால் அவதிப்பட்டு வருகிறார். இந்திய மாநிலமான தெலங்கானா, சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2021-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், கருணை அடிப்படையில் அவரது மகனுக்கு கண்டக்டர் வேலை கொடுக்கப்பட்டது. ஆனால், கண்டக்டர் வேலை வழங்கப்பட்ட அமீன்...
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தீபாஞ்சலி நகரை சேர்ந்தவர் சிறுமி நிதி கிருஷ்ணா .14 வயதான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் உடல் ஆரோக்கியத்திற்காக நிதி கிருஷ்ணா தினந்தோறும் கற்றாலை சாறு குடிக்கும் பழக்கத்தை கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தாய் மற்றும் தந்தை வேலைக்கு சென்றிருந்த நிலையில் பாட்டிலில் குளிர்பான பாட்டிலில்...
டெல்லி பகார்கஞ்ச் ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் 2 வயது சிறுமி அனாதியா. இச்சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்து வரும் 15 வயது சிறுவன், தனது தந்தையின் காரை இயக்கிய போது சிறுமி அனாதியா மீது காரை ஏற்றிவிட்டார். கார் டயருக்கு அடியில் சிக்கிய சிறுமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டவர்கள் உடனடியாக ஓடி சென்று காரை...