Tuesday, December 24, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
1068 POSTS 0 COMMENTS
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் வாக்குவாதம் முற்றிய நிலையில், தூத்துக்குடி அருகே மனைவியை கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (54). லாரி டிரைவரான இவருக்கும் மதுரையைச் சேர்ந்த ரெஜினாமேரி (47) என்பவருக்கும் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகனும், வர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இதில் சதீஷ்குமார் திருமணம் முடிந்து தனது...
நாமக்கல் மாவட்டம், எண்.3 கொமராபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (46). கூலித்தொழிலாளி இவரது மனைவி செல்வி (36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பழனிவேல் கடந்த 2ம் தேதி மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இறந்த பழனிவேலின் சகோதரி சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் வெண்ணந்தூர் போலீசார்...
உத்தரப்பிரதேசத்தில் கணவனை கட்டி வைத்து மர்ம உறுப்பில் சிகரெட்டால் சூடுபோட்ட மனைவி கைதுசெய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம், சியோஹரா மாவட்டத்தில் உள்ள பிஜ்னோர் என்ற இடத்தை சேர்ந்தவர் மெகர் ஜஹன். இப்பெண்ணுக்கும் மனன் சைதி என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமானவுடன் மெகர் தனது கணவனை தனிக்குடித்தனம் செல்லவேண்டும் என கட்டாயப்படுத்தி தனிக்குடித்தனம் சென்றார். தனிக்குடித்தனம் சென்ற நாளில் இருந்து மெகர் தினமும் தனது கணவரை அடித்து சித்ரவதை...
அமெரிக்காவில் 3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தாய், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, உங்களது மகனுக்கு குட்பாய் சொல்லுங்கள் என தனது முன்னாள் கணவருக்கு அந்த பெண் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அமெரிக்காவில் 3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி அரங்கேறியது....
பெரியநாயக்கன்பாளையம்: கோவையில் இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய பக்கத்து வீட்டு வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த ரேணுகா என்பவரை மர்ம நபர் தலையில் கத்தியால் வெட்டி படுகொலை செய்து அவர் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில், எதிர்...
ஆன்லைன் விளையாட்டுக்களில் பணத்தை தொலைத்த பலர் அடுத்தடுத்து தற்கொலை செய்து வருகின்றனர். எத்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் தற்கொலைகள் தொடர்கதையாகி வருவது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை புதுப்பேட்டை பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடன் தொகையை செலுத்திய...
நாடு முழுவதும் சமீப காலங்களாக உணவே விஷமாக மாறி வருகிறது. வாடிக்கையாளர்களின் உடல்நலன் குறித்து கவலைப்படாமல் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பல உணவகங்கள் பெருகி வருகின்றன. மக்களும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்து தமிழகத்திலும் அசைவ உணவகங்கள் பரிமாறிய ஹோட்டல்களில் ரெய்டுகள் நடந்து பல அதிர்ச்சிகள் வெளியானது. காலாவதியான சிக்கன், சாஸ், எலி கறி, பூனைக்கறி, பிரியாணியில் எலியின்...
இராமநாதபுரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தான நெஞ்சை பதற வைக்கும் பின்னணியை போலீசார் தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் புல்லாணியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். கொத்தனார் கூலி தொழிலாளியான இவர் மற்றொரு சமூகத்தை சேர்ந்த செவிலியரான சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அஜய்(16) என்ற மகனும்...
தூத்துக்குடியில் ஆண் நண்பர்களுடன் நட்பை கைவிட மறுத்த மனைவியை கணவன், தன் மனைவியின் தாய்மாமாவுடன் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள முத்தலாபுரத்தை சோ்ந்தவா் பாலமுருகன். சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சந்தனமாரியம்மாள். பாலமுருகன், சிங்கப்பூரில் சம்பாதித்த பணத்தை தனது மனைவியின் வங்கிக்கணக்கிற்கு மாதந்தோறும் அனுப்பி வந்துள்ளார். அந்தப் பணத்தில் தூத்துக்குடி கிருபை நகரில் சந்தன மாரியம்மாள் தன் பெயரில் புதிதாக...
புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சுமார் 7.60 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தோல்வியடைந்தனர். இருப்பினும் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்...