Monday, December 23, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
1059 POSTS 0 COMMENTS
19 வயசு தான்... எத்தனையோ கனவுகளுடன் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு அந்த பெண் புறப்பட்டு சென்றிருப்பார். அத்தனையும் நொடிபொழுதில் நாசமாகி விட்டது. அக்டோபர் 2023ல் லண்டனில் உள்ள க்ராய்டனில் உள்ள வீட்டில் தனது 19 வயது மனைவியைக் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர் ஒருவருக்கு இங்கிலாந்தில் உள்ள நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பெருநகர காவல்துறையின் கூற்றுப்படி, சாஹில் ஷர்மா, 24, அக்டோபர் 29, 2023 அன்று போலீசாரை அழைத்து,...
18 வயசு என்பதெல்லாம் உயிரை இழக்கிற வயசே.. இன்ஸ்டாவுல லைக்ஸ், ஷேர்களுக்கு ஆசைப்பட்டு உயிரைப் பணயம் வைத்து பலரும் வீடியோக்களை எடுத்து பதிவிடுகின்றனர். அப்படி உயிரை இழந்திருக்கிறார் இன்ஸ்டா பிரபலமான 18 வயதான மனிஷா. உத்தரபிரதேச மாநிலம், லக்னோ மாவட்டம், விகாஸ் நகர் செக்டார் சங்கோலி கிராமத்தை சேர்ந்தவர் மனிஷா (வயது 18). இன்ஸ்டாகிராமில் வீடியோ ரீல்களை வெளியிட்டு பிரபலமானவர். சம்பவத்தின் போது, அந்த பெண் லக்னோவில் உள்ள இந்திரா...
தமிழகம் முழுவதுமே வெயில் அதிகரித்து வரும் நிலையில், அதிகளவில் நீர் அருந்துங்கள் மக்களே.. உங்கள் குழந்தைகளையும் தேவையான அளவு நீர்சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்திக்கோங்க. ராணிப்பேட்டை அருகே குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு சென்ற 14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் உள்ள டி.சி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (43). முன்னாள் ராணுவ...
காதலிச்சவனே புருஷனா அமைஞ்சாலும் எல்லோரும் சந்தோஷமாக எல்லாம் வாழ்ந்துவிடுவதில்லை. காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் மாமியார், மாமனார் கொடுமை எல்லாம் கிடையாது என்கிறார்கள். ஆனாலும் காதலர்களாக இருந்த வரை இருந்து வந்த சந்தோஷம், திருமணத்திற்கு பிறகு இருவருக்குமிடையே இல்லை என்கிறார்கள். தொடர்ந்து கணவன், மனைவிக்குள் சண்டை நீடித்து வந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவனும் தற்கொலை செய்து கொண்ட...
கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு கரூரில் இருந்து காரில் சிறுமுகை ஜடையம்பாளையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நெசவாளர் காலனி என்ற இடத்தில் பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கல்லூரி மாணவர்கள் சிலர் பயணித்த காரும் முருகனின் காரும் நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி ரஞ்சிதா, இவர்களது மகன் அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே...
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தா கோட்டையில் வசித்து வரும் 44 வயது பெண் வர்ஷா ஷாகு. இவருக்கு கடந்த 17 ஆண்டுகளாக அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனையடுத்து ஆஸ்துமாவாக இருக்கலாம் எனக் கருதி அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வேறொரு சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு...
40 வயது கொண்ட மூன்று குழந்தைகளின் தந்தையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த 21 வயது மகளை கண்டித்த தந்தையை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கத்தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு...
கோவையின் வெவ்வேறு கல்லூரிகளில் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தனுஷ் கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே தனுஷ் நேற்று சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், கழிவறைக்குச் சென்ற தனுஷ் அங்கு தவறுதலாக வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. கீழே விழுந்த...
டிரெண்டிங் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் அதிகரித்து வரும் தாய் - மகன் உறவை கொச்சைப்படுத்தும் வீடியோக்கள் தொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடும் கவலை எழுப்பி வந்ததன் மத்தியில், தற்போது இன்ஸ்டாகிராமுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. சேலஞ்ச், டிரெண்டிங் உள்ளிட்ட பெயர்களில், அவ்வப்போது விநோதமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாவதுண்டு. அவற்றில் பலதும் அநாகரீக மற்றும் அபத்தமானவை. அதில் ஒன்றாக அம்மா - மகன் பாசத்தை காட்டும்...
கோவையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பபிஷா (18) என்ற மாணவி முதலாம் ஆண்டு நர்சிங் கல்வி பயின்று வந்தார். இந்த...