Thursday, November 21, 2024

tnadmin

tnadmin
169 POSTS 0 COMMENTS
வவுனியா கண்டி வீதியில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் வரையிலான பகுதியில் தினசரி 3க்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெறுகின்றன. இதனையடுத்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க ஆலோசனைக்கமைய கண்டி வீதியில் புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா மணிக்கூட்டு...
கில்லி படம் விஜய் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் கொடுத்தது. அதில் தளபதி விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். இந்த திரைப்படம் காதல்,சண்டை என அணைத்து காட்சிகளிலும் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.அதில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர். ஜெனிபர் அவர்கள் இதற்கு முன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடர்ந்தார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தினை...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணப்பெட்டியை கடத்தி செல்ல முயற்சித்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் துப்பாக்கி ஒன்றை காட்டி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பணப் பெட்டியுடன் தப்பிச் செல்ல முயன்ற சந்தர்ப்பத்தில் பெண் பொலிஸ் அதிகாரி சாமர்த்தியமாக செயற்பட்டுள்ளார். குறித்த பெண் பொலிஸ் அதிகாரியும் புலனாய்வு அதிகாரிகள் இருவரும் சந்தேக நபர்களை துரத்தி சென்று பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பணப்பெட்டியில் சுமார் 79 இலட்சம் ரூபா பணம் இருந்ததாக...
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் சுற்றுலாப்பயணிகள் ஆகக்குறைந்தது 5 இரவுகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுகாதார ஓழுங்கு விதிகளின் கீழ் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு அழைக்கப்படவுளதாக இலங்கை சுற்றுலா சபை தெரிவித்துள்ளது. இதன்போது எந்த நாட்டில் இருந்தும் அனைத்து வயது பிரிவினரும் இலங்கைக்கு வந்துச்செல்லும் வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்படி ஆகஸ்ட் முதல்...
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த மாதம் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு மே மாதத்திலும் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைய இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. இதன்படி நாளைய தினம் முதல் இந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதேவேளை, ஒய்வூதிக்கொடுப்பனவும் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப தகராறு காரணமாக கணவன் 112 பனடோல் மாத்திரைகளை சாப்பிட்டதால், மன வருத்தத்திற்கு உள்ளான மனைவி, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பலாங்கொடை பிரதேசத்தில் இன்று நடந்துள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தகராறு காரணமாக கணவன் 112 பனடோல் மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மன வருதத்திற்கு உள்ளான மனைவி இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாங்கொடை கல்வல வீதி உடகந்தை என்ற முகவரியில் வசிக்கும்...
வெளிசர கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில், கேகாலை அரநாயக்க பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சுய தனிமைப்படுதலில் ஈடுபட்ட சிப்பாய்க்கு உதவியாக இருந்த அவரது பாட்டி இன்று காலை உயிரிழந்துள்ளார். வெலிசரை கடற்படை முகாமில் கடமையாற்றிய படைச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியானதைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தவர்களில் குறித்த படைச் சிப்பாயின் பாட்டியே அரநாயக்க பகுதியில் உயிரிழந்துள்ளார். இறந்தவரின்...
யாழ்ப்பாணம் உட்பட 21 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(04.05.2020 காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 11ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 21 மாவட்டங்களில் இன்று முதல் புதன்கிழமை வரை காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும். அதன் பின்னர், புதன்கிழமை இரவு 8 மணிமுதல்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 718ஆக அதிகரித்துள்ளது. இந்த விடயத்தை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று இரவு 11:15 க்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 718ஆக அதிகரித்துள்ளது.