Tuesday, December 3, 2024

tnadmin

tnadmin
169 POSTS 0 COMMENTS
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாகும் மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபதி என்ற பெண். மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் பிரிவை சேர்ந்த இவர், ஏலகிரி மலையில் கல்வி கற்றார். இதைத்தொடர்ந்து B.A.,B.L., சட்டப்படிப்பை படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. எனினும் படிப்பை...
சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (42). அப்பகுதியில் மளிகை நகை நடத்தி வருகிறார். இவரது மனைவி சியாமளா தேவி (36). இவர்களுக்கு இரண்டு மகன்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பண நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மளிகை கடையை மூடிவிட்டார். இதனால் குடும்ப வறுமையின் காரணமாக சியாமளா தேவி, வீட்டின் அருகே உள்ள இ-சேவை மையத்தில் கடந்த 10 நாட்களாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சியாமளா...
கள்ளக்காதல் விவகாரத்தில் திருமணமான பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாப்பூர் டவுன் சாம்ராஜ்பேட்டில் வசித்தவர் தீபா (40). இவருக்கு திருமணமாகி கணவர், இரண்டு மகன்கள் உள்ளனர். வீட்டின் அருகே உள்ள பேக்கரிக்கு தீபா அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த பேக்கரியில் வேலை செய்த திவாகர் (37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. திவாகர்...
ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலைக்கழக விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவன், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவிலில் தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டம், நரசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரப்பா என்பவரது...
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பாம்பேகேசில் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). ஊட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பள்ளி நண்பர்களான இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில்,...
சத்தீஸ்கர் மாநிலத்தில் கணவனைத் தாக்க வந்த கழுதைப்புலி கூட்டத்தை வீரத்துடன் அவரது மனைவி எதிர்கொண்டார். அத்துடன் கழுதைப்புலி ஒன்றைக் கொன்று, கணவனை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யமனை எதிர்த்து கணவன் சத்தியவானின் உயிரை காப்பாற்றினார் சாவித்திரி என நாடு முழுவதும் ஏராளமான கதைகள் உள்ளன. பெண்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இந்த கதைகள் செவிவழிச் செய்தியாக பரப்பப்படுகின்றன. பண்டைய தமிழ் நூல்களில் புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழச்சி...
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், காலை உணவு தராததால் 17 வயது மாணவன் தனது தாயை அடித்துக் கொன்றதாக பதிவான வழக்கில், திடீர் திருப்பமாக 40 வயதுடைய பெண்ணை, அவரது கணவரே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்திருந்த பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸார், அவரது கணவரை கைது செய்து, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பியையும் கைப்பற்றியுள்ளனர். பெங்களூரு கே.ஆர். புரம் காவல் நிலையத்திற்கு...
கர்நாடகா மாநிலத்தில் தங்கை முறை உள்ள இளம்பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களும், உறவினர்களும் முறை தவறிய காதல் உறவைக் கைவிட அறிவுறுத்தி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், உறவினர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் மாகனகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பா (24). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இவருக்கும், இவரது உறவினர்...
பிரதிமா (45) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவர் மாநில அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். பெங்களூருவில் உள்ள தொட்டகல்லசந்திராவில் வசித்து வருகிறார். ஆனால் கடந்த நவம்பரில் யாரோ அவரை படுகொலை செய்து விட்டு வீட்டில் வைத்து கொடூரமாக கத்தியால் குத்தி கொன்றனர் . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த தங்க...
இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனைவிக்கு மொட்டையடித்து தெருவில் இழுத்து சென்ற திரைப்பட தொழிலாளி கணவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெடகொண்டேபூடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு (33). இவர் தெலுங்கு சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் (துணை நடிகர்) ஆவார். இவர் தன்னுடன் பணியாற்றிய நெல்லையை சேர்ந்த ஆஷா (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹைதராபாத்தில் வசித்த இவர்களுக்கு ஒரு மகன்...