Belfort நகரில் கத்திக்குத்து தாக்குதல்! – ஒருவர் சாவு!!

939

சனிக்கிழமை (21.06.2020) Belfort நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலை அடுத்து ஒருவர் சாவடைந்துள்ளார்.

சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் Belfort நகரில் உள்ள rue Thiers வீதியில் வைத்து (Belfort தொடருந்து நிலையத்துக்கு சில மீற்றர் தொலைவில்) இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

30 வயதுடைய நபர் ஒருவரை பிறிதொரு நபர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். தாக்கிய நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.


காவல்துறையினரின் தகவல்கள் படி, Le Ghost hookah bar எனும் மதுபான விடுதி வாசலில் இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றது எனவும், இருவரும் மதுபோதையின் விளைவாக வாக்குவாதம் ஒன்றில் ஈடுபட்டு இருவரும் தாக்கிக்கொண்டதாக தெரிவித்தனர்.

SAMU அதிகாரிகள் காயமடைந்த நபரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர் சில நிமிடங்களுக்குள்ளாக சாவடைந்தார்.