`I am a Loser… அம்மா, அப்பா என்னை மன்னிச்சிருங்க.. விபரீத முடிவெடுத்த மாணவி!!

374

ராஜஸ்தானில்..

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த மாணவி நிஹாரிகா (18). இவர் மத்திய அரசின் Joint Entrance Examination (JEE) நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்த நிலையில், அவர் இன்று தூக்கில் தொங்கிய நிலையில், மீட்கப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ந்த அவரின் பெற்றோர், மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நிஹாரிகா இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, ஒரு தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றியிருக்கிறது. அந்தக் கடிதத்தில் நிஹாரிகா, “அம்மா, அப்பா என்னால் JEE தேர்வுக்குத் தயாராகமுடியவில்லை. நான் தோல்வியடைந்துவிட்டேன்… நான் மிக மோசமான மகள்… என்னை மன்னித்து விடுங்கள். தற்கொலைதான் எனக்கு இருக்கும் இறுதி வழி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

போட்டித் தேர்வால், கடுமையான மன அழுத்தத்துடன்பாடங்களைப் படித்து வந்தார். தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் படிப்பதற்காகச் செலவழித்திருக்கிறார். ஆனாலும், மாணவியின் இந்த முடிவுக்கான காரணம் குறித்து, பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகு விசாரிக்கப்படும் எனக் காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.


சில மாதங்களுக்கு முன்பு இதே கோட்டாவில் நீட் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்த, உத்தரப்பிரதேச மாணவர் முகமது ஜைத் தற்கொலை செய்துகொண்டார். ஒவ்வோர் ஆண்டும் JEE, NEET போன்ற தேர்வுகளுக்குத் தயாராவதற்காக 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கோட்டாவுக்குச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.