சாய் பல்லவி…
தமிழ் நடிகைகளுக்கு எப்போதுமே பெரிய மார்க்கெட் கிடைக்காது என்பதை உடைத்தவர் என்னவோ சாய் பல்லவி தான். அவர் முதலில் ரீச் கொடுத்ததே அக்கட தேசமான மலையாள திரையுலகில் தான். பிரேமம் படத்தின் மலர் டீச்சரை இன்னமும் ரசிகர்கள் மறக்கவில்லை. அப்படம் ஹிட் அடிக்க அம்மணிக்கு பல மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் குவிந்தது.
அசல் தமிழ் பொண்ணான சாய் பல்லவி தமிழில் நடிப்பதற்கு முன்னரே தெலுங்கிலும் ஃபிடா என்ற ஹிட் படத்தினை கொடுத்துவிட்டே இங்கே எண்ட்ரி கொடுத்தார். எந்த மேக்கப்பும் இல்லாமல் சிம்பிள்ளாக இருக்கும் சாய் பல்லவியை யாருக்கு தான் பிடிக்காது. முதலில் தமிழில் தியா படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் மற்ற மொழிகள் போல பெரிய ரீச்சை கொடுக்கவில்லை.
அதை தொடர்ந்து மாரி இரண்டாம் பாகத்தில் தனுஷின் ஜோடியாக நடித்தார். அதில் அம்மணி நடிப்பை விட மை டியர் மச்சான் பாடலுக்கு போட்ட ஆட்டம் ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொண்டார். இருந்தும் அதன் பின்னர் கிடைத்த எல்லா வாய்ப்புமே சாய் பல்லவிக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பல மொழிகளில் பிஸி நாயகியாக வலம் வருகிறார்.
தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு பூஜா என்ற தங்கை இருக்கிறார். இவரும் பல நாள் போராடி சித்திரை செவ்வானம் என்ற படத்தில் நடித்து இருந்தார். அப்படத்தில் இவரும் சமுத்திரக்கனியும் இணைந்து முக்கிய கதாபாத்திரம் ஏற்று இருப்பார். படம் பெரிய அளவில் ரீச் கொடுக்கவில்லை என்றாலும் பூஜாவின் நடிப்புக்கு பாராட்டுக்களே வந்தது.
இந்நிலையில் சாய் பல்லவியை விட ஐந்து வயது சிறியவரான பூஜா தன்னுடைய வருங்கால கணவர் இவர் தான் என வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் க்ரைம் பார்ட்னர் தற்போது என் பார்ட்னர் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அப்போ சாய் பல்லவிக்கும் திருமணம் நடக்குமா? இல்லை முதலில் பூஜா மட்டுமே திருமணம் செய்ய இருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
View this post on Instagram