சீனாவின் வடமேற்கில் அமைந்துள்ள ஜின்ஜியாங் மாகாண அரசாங்கம் கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன் ஒருபகுதியாக இங்கு பாரம்பரிய சீன மருந்துகளை உட்கொள்ள மக்களை கட்டாயப்படுத்துகிறார்கள் என்று அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படும் மூலிகைகள் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் தடை செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் சீனாவில் அதிக பாதிப்பு இருந்தாலும், ஜூலை நடுப்பகுதியில் இருந்து ஜின்ஜியாங்கில் 826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு தீவிரமான ஊரடங்கு அமுலுக்கு கொண்டு வந்ததால் புதிய பாதிப்புகள் இல்லை. சீனாவின் ஹூபே மாகாணம், வுஹானில் 68,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் ஜின்ஜியாங்கைப் போல் மக்களை பாரம்பரிய மருந்தை உட்கொள்ள கட்டாயப்படுத்தவில்லை.
சீனாவில் பிற இடங்களில் அதிக தாக்கம் இருந்தபோதிலும் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தியுள்ள நிலையிலும், ஜின்ஜியாங் அரசு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பாமல் உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில், ஜின்ஜியாங் அதிகாரிகள் ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட உய்குர்கள், கசாக் மற்றும் பிற இன சிறுபான்மையினரை பாதுகாப்பு ஒடுக்குமுறையின் கீழ், சட்டவிரோத தடுப்பு முகாம்கள் உட்பட பல்வேறு வகையான தடுப்புக்காவல்களுக்குள் தள்ளியுள்ளனர்.
இது அவர்கள் பாதுகாப்புக்கு என தெரிவிக்கும் அதிகாரிகள், மற்ற இடங்களைவிட ஏன் கடுமையான நடவடிக்கைகளை இங்கு எடுத்துள்ளனர் என்பதுபற்றி கருத்துத் தெரிவிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
சீன அரசாங்கம் பல ஆண்டுகளாக இவர்களின் பூர்வீக ஆட்சியை எதிர்த்து ஜின்ஜியாங்கை கட்டுப்படுத்த போராடி வருகிறது. இந்த மாதம், சமூக ஊடகங்களில், கொரானாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஜின்ஜியாங்கில் மிகவும் கடினமாக உள்ளதாக பலர் புகார் அளித்துள்ளனர்.
கடும்விமர்சனங்களுக்குப் பிறகு அதிகாரிகள் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளனர். இப்போது சில குடியிருப்பாளர்கள் தங்கள் வளாகங்களுக்குள் நடக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒருசிலரே அதிகாரத்துவ ஒப்புதல் செயல்முறைக்குப் பிறகு இப்பகுதியைவிட்டு வெளியேவர அனுமதி பெற்றுள்ளனர். கொரோனா சோதனையை ஐந்துமுறை எடுத்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் என வந்தாலும் அவர்களை நடைப்பயணத்திற்குக்கூட ஏன் வெளியே விடவில்லை என்று கூறவில்லை.
மேலும் பாரம்பரிய சீன கலாசாரத்தின் மறுமலர்ச்சியை ஆதரிக்கும் சீன சர்வாதிகார தலைவரான அதிபர் ஜி ஜின்பின் இந்த தீர்வை ஆதரிக்கிறார் என்று கூறுகின்றனர்.