கேரளா…
கேரளாவில் அதிவேகமாக வந்த லாரி சாலை வளைவில் திரும்பும்போது மோசமான விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
மலப்புரம் மாவட்டம் வட்டப்பாறா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் என் ஜி ஜி லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரிடப்பட்ட கண்டெய்னர் லாரி வேகமாக வந்தது.
அப்போது சாலையில் இருந்த வளைவில் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சாலையில் நின்றிருந்து இரு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த வேளையில்,
லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.