அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க.. பாத்ரூம் கூட போக முடியல.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த அம்மு அபிராமி!!

146

அம்மு அபிராமி..

விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை தான் அம்மு அபிராமி. இப்படத்தை தொடர்ந்து என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன், கண்ணகி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

கண்ணகி படத்தின் புரமோஷனுக்காக பேட்டியளித்த அம்மு அபிராமி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், பல கோடி போட்டு படம் எடுக்கிறார்கள், ஆனால் நடிகைகள் பாத்ரூம் போக கூட சரியான வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதில்லை.

சில திரைப்படங்களில் நான் பணியாற்றும் போது அங்கு பாத்ரூம் போகவும், உடை மாற்றவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். வெளி இடங்களில் ஷூட் செய்யும் போது அட்ஜெஸ்ட் பண்ணிக்க சொல்கின்றனர்.


இந்த மாதிரியான விஷயங்களை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். இதெல்லாம் ஷூட்டிங் தளத்தில் இருக்க வேண்டிய அடிப்படை உரிமை தானே என்று அம்மு அபிராமி கூறியுள்ளார்.