அது தெரிந்திருந்தால் ஐஸ்வர்யா ராயை கெடுத்து இருப்பேன்.. நடிகர் ராதா ரவி சர்ச்சை பேச்சு!!

173

ஐஸ்வர்யா ராய்..

மூத்த நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ராதா ரவி தற்போது குணச்சித்திர ரோல்களில் நடித்து அரசியலில் ஈடுபட்டும் வருகிறார். சமீபகாலமாக, நடிகைகளை பற்றி மேடையில் சர்ச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கி வந்தார். சமீபத்தில் கூட வட இந்திய நடிகைகளை இங்கு நடிக்க வைப்பது குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

நம்ம ஊர் நாடக நடிகைகளை உங்கள் படங்களில் நடிக்க வையுங்கள். அதனால் சீக்கிரம் படமும் முடியும் லட்சக்கணக்கில் செலவையும் குறைக்கலாம். ஆனால் எங்கிருந்தோ வரும் வட இந்திய ஆட்களை பிடித்து வருகிறீர்கள். அப்படி வரும் அவர்கள் பொட்டுத்துணி இல்லாமல் வருகிறார்கள். அவர்கள் ஊரில் அணியும் ஆடையுட இங்கே வந்து நம்முடைய ஆடையை கொடுத்து அணிவித்து,

நம்ம ஊரு பெண் போல் மாற்றிவிடுகிறீர்கள். அவர்களுக்கு தமிழும் வராது, உதட்டு அசைவும் வேறுமாதிரி இருக்கும். எதற்கு வட இந்திய நடிகைகளை இங்கே நடிக்க வைக்கிறீர்கள் என்ற காரணமும் தெரியவில்லை. தமிழ் நாட்டில் நடிகைகளே இல்லையா என்றும் தமி நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.


மேலும், நல்ல வேலை எனக்கு இந்தி தெரிந்திருந்தால் ஐஸ்வர்யா ராயை கெடுத்து இருப்பேன். நல்ல வேலை எனக்கு இந்தி தெரியாது. அதாவது இந்தி தெரிந்தால் வில்லனாக நடித்து ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன். நமக்கு அந்த வேஷம் தானே கொடுப்பாங்க என்று சொன்னேன். அதனால் தமிழ் நடிகர்கள் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பேசியிருக்கிறார்.