அமர்ந்த இடத்தில் பல மணிநேரம் வேலை செய்பவரா நீங்கள்? இறப்பிலிருந்து தப்பிக்க இதை செய்ங்க!!

979

அமர்ந்து வேலை…

நீங்கள் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் என்றால் வெறும் 22 நிமிடங்களில் நீங்கள் செய்யும் உடல் செயல்பாடுகள் பல உடல்நல அபாயங்களை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வேலை என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இதில் சிலர் அலைந்து செய்யும் வேலையாகவும், சிலர் அமர்ந்த இடத்தில் செய்யும் வேலையாகவும் இருக்கும். அவ்வாறு அமர்ந்த இடத்தில் 9 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் நபர்கள் பல உடல்நல பிரச்சினையை ஏற்படுத்தும்.

அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வர்கள் டிமென்ஷியா, உடல் பருமன், இதய நோய் போன்ற பாதிப்புகளை சந்திப்பதாகவும், இவர்களால் தனது பணி நிமிர்த்தம் எந்தவொரு உடற்பயிற்சியும் செய்ய முடிவதில்லை என்றும் இவர்கள் எவ்வளவு நேரம் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.


50 வயதுடடைய ஸ்வீடன், நார்வே, மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், அதிக நேரம் வேலை பார்த்தவர்கள் அதிகமாக உயிரிழப்பது தெரியவந்துள்ளது.

நோர்வேயின் ஆர்க்டிக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான எட்வர்ட் சாகெல்வ் என்ற ஆய்வு ஆசிரியர் கருத்தின்படி, வேலை பளுவினால் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்கள் ஒரு 20 நிமிடம் கட்டாயம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமாம்.

இதற்காக நீங்கள் ஜிம்மிற்கு சென்று கஷ்டப்படாமல் நடக்கும் தொலையில் இருக்கும் வேலையை நடந்தே சென்று உடலுக்கு வேலை கொடுக்க வேண்டுமாம். பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இந்த உடற்பயிற்சியினை மேற்கொண்டால் உடல் நலம் பாதுகாக்கப்படுவதுடன், இறப்பு விகிதமும் குறைவதாக தெரியவந்துள்ளது.