அயர்ந்து உறங்கிய இளம்பெண்ணின் தொண்டைக்குள் நுழைந்த உயிரினம்: வெளியே எடுத்தபோது அலறிய மருத்துவர்கள்!!

473

ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் அயர்ந்த தூக்கத்துக்குபின் எழுந்தபோது வயிற்றுக்குள் ஏதோ அசௌகரியமாக உணர்ந்துள்ளார்.

உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது வயிற்றுக்குள் ஏதோ நுழைந்துள்ளது என்பதை மட்டும் உறுதி செய்துகொண்ட மருத்துவர்கள் வாய் வழியாக எண்டோஸ்கோப் என்னும் கருவியை செலுத்தி வயிற்றுக்குள் சென்ற பொருளை வெளியே எடுத்துள்ளனர்.

ஏதோ நீளமாக வர, முதலில் அது என்ன என்று கவனிக்காத பெண் மருத்துவர் ஒருவர், அது ஒரு 4 அடி நீள பாம்பு என்பதை உணர்ந்ததும், பதறி பின்வாங்குவதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம். அந்த அறையிலிருந்த செவிலியர்கள் உட்பட மற்ற மருத்துவ ஊழியர்களும் பாம்பைக் கண்டதும் பயத்தில் அலறியிருக்கின்றனர்.


ரஷ்யாவிலுள்ள Levashi என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கிடையில், இளைஞர்களை வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கவேண்டாம், பாம்பு ஏதாவது வாய்க்குள் போய்விடும் என்றே அந்த கிராம முதியவர்கள் எச்சரிப்பது வழக்கமாம்.

இந்த இளம்பெண்ணைப் பொருத்தவரை அது நிஜமாகவே நிகழ்ந்துவிட்டிருக்கிறது.