அழகை அதிகரிக்க அறுவை சிகிச்சை… பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்!!

515

பிரேசிலில்..

பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தைச் சேர்ந்தவர் லிஜியா. லிஜியாவுக்கு டேவி, தோர் என இரண்டு மகன்கள் உள்ளனர். கணவரை விட்டு மகன்களுடன் தனியே வசித்து வந்த லிஜியாவுக்கு ஒரு காதலனும் உண்டு. தன்னுடைய காதலன் பின்னழகை அதிகரிக்கும்படி ஆசைப்பட்டு கேட்டதால்,

தொழில்துறை சிலிகான் மற்றும் பிஎம்எம்ஏ பயன்படுத்தி அழகியல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் லிஜியா. ஆனால், லிஜியாவின் துரதிஷ்டம்.. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடையவில்லை. லிஜியாவின் பின்பக்கத்தை பெரிதாக்குவதற்கு பதிலாக,

அவரது உடலுக்குள் பொருத்தப்பட்ட சிலிக்கான் பை சிதைந்து, ரசாயனங்கள் லிஜியாவின் உடல் முழுவதும் பரவ துவங்கியது. உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,


தொடர்ந்து ரசாயனங்களை அகற்றுவதற்காக மூன்று மாதங்களாக மருத்துவமனையில் தங்கியிருந்தபடியே சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனாலும், விஷயம் விபரீதமானது. லிஜியாவை பக்கவாதம் தாக்கிய நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் லிஜியா மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.