தர்மபுரியில்..
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்துள்ள பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (27). தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் ஒமலூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது மனைவி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் ஆனஸ்ட்ராஜ் மனைவியின் தங்கையிடம் பழகி வந்துள்ளார். இதனையடுத்து ஆசைவார்த்தை கூறி மச்சினிச்சியை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மனைவியின் தங்கைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் இளம்பெண் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிடம் விசாரித்த போது கதறிய படி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்தராஜின் மாமனார் சேலம் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ஆனந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். திருமணமான 6 மாதத்தில் மச்சினிச்சை கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.