கம்போடியாவில் முதியவரின் சிறுநீர்பையில் இருந்து அட்டைபூச்சி அகற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கம்போடியாவின் புனோம் பென்னில் என்ற பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென அவரது உறுப்பில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் கசிந்துள்ளது, இதனால் பதறிப்போனவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அதாவது முதியவரின் சிறுநீர்பையில் அட்டை பூச்சி ஒன்று இருந்துள்ளது.
குளத்தில் குளித்த போது முதியவரின் உறுப்பு வழியே அட்டைப்பூச்சி உடலுக்குள் சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சுமார் 500 மில்லிக்கு அதிகமான ரத்தத்தை உறிஞ்சி விட்டதால், அந்த அட்டைப்பூச்சியை வெளியேற்றுவதில் மருத்துவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
இருப்பினும் அட்டைப்பூச்சியை வெளியேற்ற முதியவர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளார்.