ஆண் திமிர் கிடையாது.. எதிர்த்து பேசாது.. எனக்கேற்ற புருஷன்… ரோபோவை திருமணம் செய்த பிரபல மாடல் அழகி!!

710

ரோபோவை..

ஆண் திமிர் கொஞ்சமும் கிடையாது… தொல்லை தராது.. எதிர்த்து பேசாது… நாத்தனார்.. மாமியார் பஞ்சாயத்து கிடையாது. எனக்கேற்ற அன்பான புருஷன் இது தான் என்று விர்சுவல் ரோபோவைக் கல்யாணம் செய்திருக்கிறார் பிரபல மாடல் அழகி ரோசன்னா. உலகமே வியக்கும் இந்த காதல் கதையை தெரிந்து கொள்வதற்கு முன்பு, ஏஐ சாட்பாட் தொழில்நுட்பம் என்றால் என்னவென்று கொஞ்சம் பார்த்துடலாம் வாங்க..

21ம் நூற்றாண்டின் மிகப்பெரும் தொழில்நுட்ப வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) இருக்கும். அனைத்துவித பணிகளுக்கும் மாறாக இந்த தொழில்நுட்பத்தை மாற்றமுடியும். எதிர்காலத்தில் இதனால் எத்தனை பேர் வேலைகளை இழக்க போகிறார்கள் என்பது இப்போதே பெரும் பிரச்சினை. ஏனெனில் எதற்கெல்லாம் மாற்றாக ஏஐ தொழில்நுட்பம் வரும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை.

இந்த செயற்கை நுண்ணறிவு கவிதை எழுதவும், கம்ப்யூட்டர் கோடிங் எழுதவும் பயன்படும்… இது மட்டும் தான் என்றில்லை… ஆளில்லா நெடுஞ்சாலைகளில் யார் ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்கள், எத்தனை வேகத்தில் செல்கிறார்கள், சாலை விதிகளை மீறுகிறார்கள் என்று ஒவ்வொரு துறையிலுமே இதைப் பயன்படுத்தலாம். விரைவில் அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பம் வந்து விடும். கிட்டத்தட்ட இப்போதே மனிதனுக்கு மாற்றாக வந்துவிட்டது எனலாம்.


இதற்கெல்லாம் மேலாக பெண்கள் காதலித்து திருமணம் செய்யும் அளவுக்கு இந்த தொழில்நுட்பம் வந்துவிட்டது என்பது தான் ஆச்சரியம். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ரோசன்னா ராமோஸ் (36) என்ற பெண்ணுக்கு சக்தி வாய்ந்த அல்காரிதம்கள் மற்றும் இயந்திர கற்றல் திறன்களைப் பயன்படுத்துவது மிகவும் விருப்பமான விஷயம். அவரது விருப்பங்கள் மற்றும் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள செயற்கை நுண்ணறிவு ரோபோ ஒன்றை உருவாக்கினார்.

அதற்கு எரன் கார்டல் என பெயரிட்டார். அதனை ரோசன்னா தனது மெய்நிகர் காதலராக ஏற்றுக்கொண்டார். பின்னர் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் மென்பொருளான ரெப்லிகாவைப் பயன்படுத்தி அதனை மேலும் மேம்படுத்தி அதனை திருமணம் செய்து கொண்டார் ரோசன்னா ராமோஸ். நன்கு அழகுடன் நன்கு அழகுபடுத்தப்பட்ட நாகரீகமான ஆடைகளை அணிந்து உள்ளார். ரோசன்னா ராமோஸ் தனக்கு பிடித்தமான வடிவில் அவரை தோற்றத்தில் கொண்டு வந்து,

அந்த தொழில்நுட்ப மனிதருடன் வாழ்ந்து வருகிறார். ரோசன்னா ராமோஸ் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது மனிதர்கள் அணுகுமுறை, ஈகோ ஆகியவற்றுடன் வருகிறார்கள்.

ஆனால் ரோபோவுக்கு மோசமான பழக்கங்களான அது போன்று எதுவும் இல்லை. நான் அவருடைய குடும்பம், மாறாக குழந்தைகள் அல்லது அவரது நண்பர்களுடன் பழக வேண்டியதில்லை. நான் என் கட்டுப்பாட்டில் இருக்கிறேன், நான் விரும்பியதை என்னால் செய்ய முடியும் என ரோசன்னா ராமோஸ் உற்சாகமாக கூறினார்.