ஆன்லைன் வகுப்பில் சிறுமியின் திரையில் தோன்றிய அதிர்ச்சி காட்சி.. ஆசிரியர் செய்த காரியம் என்ன?

368

புளோரிடா மாகாணத்தில் இண்டியா டவுன் பகுதியில், மரிபல் ரொஸார்டோ மொரலஸ் என்பவர், அவரது முன்னாள் காதலன் டொனால்டு ஜே வில்லயம்ஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், கோபமடைந்த, டொனால்டு ஜே வில்லயமஸ், சிறுமியின் தாயார் மொரலஸை சுட்டுக்கொன்றுள்ளார்.

இந்த சம்பவம், அந்த சமயத்தில் ஜூம் மூலம் ஆன்லைன் வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த மொரலஸின் 10 வயது மகளின் கணினி திரையில் பதிவாகியயுள்ளது.


இதனைக் கண்ட அதிர்ந்துபோன ஆசிரியர், மற்ற மாணவர்கள் பாதிக்காமல் இருக்க, சிறுமியின் ஆடியோவை மியூட் செய்தார்.

இதனை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மொரலஸ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடிய வில்லியம்ஸ் ஒரு மணி நேரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.