ஆபிரிக்க நாட்டில் பாரிய நிலநடுக்கம் – 13பேர் பரிதாபமாக பலி!

900

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஐவோரி கோஸ்ட். நாட்டின் தலைநகர் அபிட்ஜனில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன.

நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. என்ன மழை மற்றும் வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து, மின்சாரம் கவிதை துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்த நிலையில் அபிட்ஜனையொட்டியுள்ள அனாய்மா நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இந்த கோர விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.