ஆயுதப்படை முதல் நிலைப் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு!!

357

மதுரையில்..

மதுரை ஆயுதப் படையில் முதல் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் சரண்யா ( 33 ). இவரது கணவர் பாலாஜி, 2 குழந்தைகள் உள்ளன. சரண்யா குடும்பத்துடன் ஆயுதப் படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

நேற்று மாலை சரண்யா குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சரண்யா தற்கொலை செய் வதற்கு முன்பு மொபைல் போனில் அனுப்பிய செய்தியில், ‘அனைத்து மேடம்களுக்கும் பிற்பகல் வணக்கம்.

எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி. சிட்டி ஆயுதப் படைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு நாட்களாக என் மீது யாருக்காவது கோபம் இருந்தால் மன்னித்துவிடுங்கள்.


சாரி, அனைத்து மேடம்கள், சகோதரிகள் மீது அன்பு செலுத்துகிறேன். உங்களை இழக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். தற்கொலைக் கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தல்லாகுளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.