ஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிங்க..! அப்புறம் முடி கொட்டவே கொட்டாது!!

976

முடி கொட்டுதல் சற்று எரிச்சலான விஷயம் தான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் உங்கள் முடிகளைப் பராமரிக்க நேரம் இல்லாததால் ஏதோ ஒரு ஷாம்பூ மற்றும் ஏதோ கண்டிஷனர் பயன்படுத்தி முடி கொடுக்கிறது என்ற கவலை பலருக்கும் உள்ளது.

எத்தனையோ ஷாம்பூகளை நீங்கள் மாற்றி இருப்பீர்கள் ஆனால் எந்த மாற்றமும் நிகழ வில்லையா? அப்போது நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆயுர்வேத முறையில் சில ஹேர் மாஸ்க்கை கடைப் பிடியுங்கள்.

நெல்லிக்காய் மற்றும் சீயக்காய்
நெல்லிக்காய் மற்றும் சீயக்காய் இவை இரண்டும் உங்கள் தலையில் இருக்கும் பொடுகை அகற்றும் தன்மையைக் கொண்டுள்ளது.

இது பொடுகை அகற்றுவது மட்டுமில்லாமல் தலையில் இருக்கும் அழுக்குகளை நீக்கி தலையைச் சுத்தமாக வைக்க உதவுகிறது.

மேலும் நெல்லிக்காய் உங்கள் முடியை ஈரப்பதத்துடன் வைத்து முடியின் வேர்ப்பகுதியை உறுதியானதாக மாற்றி விரைவில் நரை முடி ஏற்படாமல் பாதுகாக்கும்.


1 கப் நெல்லிக்காய் தூள் மற்றும் ½ கப் சீயக்காய்த்தூள் இரண்டையும் ஒன்றாக நீரில் கலந்து தலையில் தடவி மசாஜ் செய்து ஒருமணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை விட்டுவிட்டு பின்னர் அலசுங்கள்.

வெந்தயம்
வறுத்த வெந்தய தூள் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் நெல்லிக்காய் தூள் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்து தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வையுங்கள். அடுத்தநாள் காலையில் எழுந்து அந்த கலவையை எடுத்து தலையில் தடவி அரை மணி நேரம் உலர விட்டு பின்பு அலசுங்கள். இதனை நீங்கள் வரம் ஒரு முறை செய்யலாம்.

வல்லாரை கீரை
வல்லாரை கீரை உடல் ஆரோக்கியத்திற்கும் புண்களை ஆற்றுவதற்கும் பயன்படும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், இந்த கீரை முடி வளர்ச்சியைத் தூண்டவும் உதவுதாம். வல்லாரை கீரை எடுத்து நன்றாகக் கழுவி மிக்ஸியில் போடு அரைத்துக் கொள்ளுங்கள். அந்த கலவையை முடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். வல்லாரை கீரை பொடியை எடுத்து இரவு முழுவதும் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். இந்த முறை உங்கள் முடியை அடர்த்தியாக மற்றும் உறுதியாக மாற்றும்.