கேரள மாநிலம் இரட்டி ஆற்றில் இறங்கி செல்ஃபி புகைப்படம் எடுத்த 2 மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், இரிட்டி பகுதியில் படியூர் பூவம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இரு மாணவிகளின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன. இதில், இருக்கூரில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இடையன்னூரைச் சேர்ந்த உளவியல் மாணவி சஹர்பனா (28), அஞ்சரகண்டியைச் சேர்ந்த சூரியா (21) ஆகிய மாணவிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
இன்று காலை ஷஹர்பானாவின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், பிற்பகலில் சூரியாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணியளவில் படியூர் பூவத்தில் உள்ள வகுப்பு தோழி ஒருவரின் வீட்டிற்கு சென்ற இரண்டு மாணவிகளும், தண்ணீர் ஆணையத்தின் தொட்டிக்கு அருகில் உள்ள ஆற்றில் இறங்கி, தங்களுடைய மொபைல் போன்களில் செல்ஃபி புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்துள்ளனர்.
சில மீனவர்களும், தொட்டியின் மேல் இருந்த நீர்வள ஆணைய ஊழியர் ஒருவரும் அவர்களை ஆபத்தான பகுதி என்று கூறி அங்கிருந்து விரட்ட முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் அவர்கள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
உடனடியாக காப்பாற்ற முயன்ற நிலையில், ஆற்றில் மீனவர்களின் வலையில் மாணவி ஒருவர் சிக்கிய நிலையில், அவர்கள் வலையை கரைக்கு கொண்டு வர முயன்ற போது நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டார்.
தீயணைப்பு மீட்புக் குழுவின் ஸ்கூபா டைவர்ஸ் தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும், மாணவிகளைக் காப்பாற்ற முடியவில்லை. இரண்டு மாணவிகளின் உடல்களையும் தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை 1 மாணவியின் உடலையும், பிற்பகல் இன்னொரு மாணவியின் உடலையும் மீட்டனர்.