இந்த கிழமைகளில் மட்டும் இளைஞரை கடிக்கும் பாம்புகள்… 35 நாட்களில் 6 முறை கடித்துள்ளதாம்!!

167

கடந்த 35 நாட்களில் மட்டுமே 6 முறை விஷப் பாம்புகளிடம் இளைஞர் ஒருவர் கடி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மக்களின் மத்தியில் பாம்புகள் பழிவாங்கும் எண்ணம் கொண்டவை என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த மாதிரியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பதேபூர் மாவட்டத்தில் உள்ள சவுரா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விகாஸ் தூபே (வயது 24). இவரை கடந்த 35 நாட்களில் மட்டுமே 6 முறை விஷப் பாம்புகள் கடித்துள்ளது.

இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, முதல் முறையாக கடந்த ஜூன் -2 திகதி பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்தார்.

பின்னர், ஜூன் 2 முதல் ஜூலை 7 -ம் திகதி வரை 6 முறை பாம்பு கடித்துள்ளது. இவர், வீட்டில் இருப்பதால் தான் பாம்பு கடிக்கிறது என்று உறவினர் வீட்டிற்கு விகாஸை அவரது பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர்.

ஆனால், உறவினர் வீட்டில் வைத்தும் 5-வது முறையாக கடித்துள்ளது. அதன்பிறகு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று 6 -வது முறையாக கடித்துள்ளது.


இதுகுறித்து விகாஸ் தூபே கூறுகையில், “என்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன. என்னை கடிக்க போவதை முன்கூட்டியே என்னால் உணர முடிகிறது” என்றார்.