இந்துஜா வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

138

இந்துஜா..

தமிழ் சினிமாவில் 60,70களில் பல திரைப்படங்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். 90களிலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவரின் பேத்திதான் இந்த இந்துஜா. தத்தாவின் பெயரையே தன் பெயருக்கு பின்னால் வைத்திருக்கிறார்.

சினிமா குடும்பம் என்பதால் இவருக்கும் இயல்பாகவே சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. மாடலிங் துறையிலும் ஆர்வம் ஏற்பட்டது. சில குறும்படங்களிலும் நடித்தார். அதன்பின் மேயாத மான் திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் வைபவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மெர்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி என சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் படத்தில் தனுஷுன் மனைவியாக நடித்திருந்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.


அதன்பின் இவரை டிவி நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. திரவம் என்கிற வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். ஒருபக்கம், விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.