அமெரிக்காவில்..
அமெரிக்காவை சேர்ந்த ஜியேனி வாட்ஸ் என்ற பெண் 43 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரி படித்து வரும்போது அங்கு ஸ்டீபன் என்பவரை சந்தித்துள்ளார்.
இருவரும் தொடர்ந்து பழகிவந்த நிலையில், அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இருவரும் தினமும் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
ஆனால், இந்த காதல் ஜியேனி வாட்ஸின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. ஜியேனி வாட்ஸ் காதலித்த ஸ்டீபன் கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதால் ஜியேனி வாட்ஸின் பெற்றோர் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் கல்லூரி முடிந்ததும் ஜியேனி வாட்ஸ்க்கு வேறு இடத்தில் வேலை கிடைத்துள்ளது. இதன் காரணமாக அவரால் ஸ்டீபனை பார்க்கமுடியாமல் இருந்துள்ளது.
இதுபோன்ற காரணத்தால் ஜியேனி வாட்ஸ் தனது காதலை தியாகம்செய்து வேண்டியிருந்தது. அதன்பின்னர் காலங்கள் பல உருண்டோடிய நிலையில், தற்போது 43 ஆண்டுகளுக்கு பிறகு ஜியேனி வாட்ஸ்க்கு தனது காதலரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியுள்ளது.
அதன்பின்னர் ஸ்டீபனின் உறவுக்காரர் ஒருவரை தொடர்புகொண்டு ஸ்டீபன் குறித்து கேட்டுள்ளார். அப்போது அவருக்கு திருமணம் முடிந்து தற்போது விவகாரத்தாகி முதியோர் இல்லத்தில் இருக்கும் தகவல் ஜியேனி வாட்ஸ்க்கு தெரியவந்துள்ளது.
உடனடியாக ஸ்டீபன் இருக்கும் அந்த முதியோர் இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஜியேனி வாட்ஸ்ஸை பார்த்ததும் ஸ்டீபனுக்கு அவரை அடையாளம் தெரிந்துள்ளது.43 ஆண்டுகள் கழித்து சந்தித்துகொண்ட இந்த தம்பதியினர் தங்கள் காதலை மீண்டும் புதுப்பித்துக்கொண்டனர்.
தனது காதலன் ஸ்டீபனுக்கு இரண்டு முறை பக்கவாதம் ஏற்பட்டு கடுமையான உடல் நலம் பாதித்ததும், தற்போது அவருக்கு தங்க வீடு இல்லாததையும் அறிந்து கொண்ட ஜியேனி வாட்ஸ் அவரை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த அக்டோபரில் நடந்த நிலையில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.