இன்றைய ராசிபலன் (02.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

533

இன்றைய ராசிபலன்….

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமும் துன்பமும் சேர்ந்த நாளாக அமையும். இந்த நாளில் மன கசப்பான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஏதாவது அம்மனை மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள். அம்பாள் பெயரை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். உறவுகளுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். மார்கழி மாதம் முடிவதற்குள் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு நல்லெண்ணெய் தானம் செய்வது நல்லது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அற்புதமான நாளாக இருக்கும். இறை வழிபாடு செய்வதில் நன்மை நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லது கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி செவிகளில் விழும். இப்படி பல நன்மைகள் சேர்ந்த நாள் தான் இன்றைய நாள். இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் பெருமாள் கோவிலுக்கு உங்கள் கையால் துளசி இலை மாலை வாங்கி கொடுங்கள். நல்லது நடக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பணத்துக்காக அடுத்தவர்களிடம் கை நீட்ட வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு வரும். தவிர்க்க முடியாத சூழ்நிலை எனும் போது கடன் வாங்கி தான் ஆக வேண்டும். அனாவசிய செலவுக்கு கடன் வாங்கும் பழக்கத்தை விட்டுடுங்க. மத்தபடி வியாபாரம், வேலை பிரச்சனை இல்லாமல் செல்லும். இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் சிவன் கோவிலிலுக்கு வில்வ இலை மாலை வாங்கி போடுங்க நல்லது நடக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். தனியாக இருப்பது போல ஒரு உணர்வு தோன்றும். எல்லோரும் இருந்தும் இல்லாமல் இருப்பதாக நினைச்சுப்பீங்க. கவலைப்படாதீங்க, இது நிரந்தரமான கஷ்டம் அல்ல. ஒரு சில நாட்களுக்குள் மாறிவிடும். வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு போயிட்டு வாங்க. உறவினர்களோடு மனம் விட்டு பேசுங்கள். நிச்சயம் உங்கள் மனசு லேசாகும். கவலைகள் நீங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு உங்கள் கையால் வாசனை நிறைந்த பூக்களை கட்டி கொடுங்க.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்போடு எல்லா வேலையையும் முடித்து விடுவீர்கள். கோவிலுக்கு சென்று இறை ஆசிர்வாதத்தையும் பெறுவீர்கள். வீட்டில் பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு, உங்கள் மனைவி உறுதுணையாக இருப்பாங்க. வேளையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். லாபம் கிடைக்கும். மார்கழி மாதம் முடிவதற்குள் உங்கள் கையால் சக்கரை பொங்கல் செஞ்சு பக்கத்துல இருக்குற கோவிலுக்கு நெய்வேத்தியம் வைத்து தானம் செய்யுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சில சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. என்னவென்றே தெரியாது. பிரச்சனை கண் முன்னே வந்து நிற்கும். எதனால் இந்த பிரச்சனை வந்தது என்று யோசிப்பதற்குள், அந்த பிரச்சனை சரியாகிவிடும். ஆகவே, இன்று கவலைகளைக் கண்டு நீங்கள் சோர்ந்து போகக்கூடாது. உங்களுடைய வேலையில் மட்டும் ஆர்வம் காட்டினால் போதும். நல்லது நடக்கும். மார்கழி மாதம் முடிவதற்குள் ஹனுமன் கோவிலுக்கு சென்று அவருக்கு ஒரு பாக்கெட் வெண்ணெய் வாங்கி வைத்து நிவேதனம் செய்வது நன்மையை தரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக அமையும். ஆனால் நீங்கள் அனாவசியமாக அடுத்தவர்களை பற்றி குறை சொல்லாதீங்க. அடுத்தவர்களை கை நீட்டி புறம் பேசாதீங்க. அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் நல்லது நடக்கும். பிரச்சனைகளை நீங்கள் தானாக தேடிப் போகக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். அந்த நேரத்தில் உங்களை நீங்கள் தான் இன்னைக்கு கட்டுப்படுத்திக் கொள்ளணும். மார்கழி முதல் நாள் மகாலட்சுமியை நினைத்து கோவிலுக்கு வெளியில் யாசகம் கேட்பவர்களுக்கு உங்களால் முடிந்த உணவை தானம் செய்யுங்க.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். பெரிய அளவில் பிரச்சனைகள் இருக்காது. வேலை இருந்தாலும் அதை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக செய்து முடிப்பீர்கள். பெரிய பெரிய சிக்கல்களை கூட போன போக்கில் தீர்த்து விடுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். புத்தி கூர்மை அறிவாற்றலோடு செயல்படுவீர்கள்‌. பாராட்டுகள் கிடைக்கும். இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் யாராவது ஒரு ஏழை குழந்தைக்கு உங்கள் கையால் நோட்டு புத்தகம் வாங்கி தானம் செய்யவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். தலைபாரம் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தாய்மாமன் வழி உறவால் ஆதாயம் கிட்டும். வாரா கடன் வசூல் ஆகும். செல்வ செழிப்பில் உங்களுடைய நிலைமை ஒரு படி உயரும். சந்தோஷம் தான். வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு தொகையை இந்த மார்கழி மாதத்தில் ஏதாவது ஒரு கோவிலுக்கு தனுர் பூஜை செய்யுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். எல்லாம் பிரச்சனையிலேயே போகிறது என்று மனசு சோர்ந்து போய் உட்காரும் சமயத்தில் நல்லது நடந்துவிடும். ஆகவே முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருக்க வேண்டாம். உங்களுடைய வேலையை நீங்கள் செய்து கொள்ள கொண்டே இருங்கள். வெற்றியா தோல்வியா என்பதை கடவுள் நிர்னையித்துக் கொள்வான். இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் அரச மரத்தடி பிள்ளையாரை மூன்று முறை வளம் வாங்க நல்லது நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். மேலதிகாரிகள் உங்களைப் பற்றி புரிந்து கொள்வார்கள். கோபத்தை குறைக்க வேண்டும். வார்த்தைகளை அளவோடு பேச வேண்டும். மாமனார் வழி உறவுகளோடு கொஞ்சம் ஜாக்கிரதையாக பழகுங்கள். எல்லை மீறி பேசும் போது பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. மார்கழி மாதம் முடிவதற்குள் சிவன் கோவிலுக்கு ஒரு நாள் தனுர் பூஜை செய்யும் செலவை நீங்க ஏற்றுக் கொள்ளுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லது நடக்கக்கூடிய நாளாக அமையும். உங்கள் மனசுக்கு பிடித்த ஒரு விஷயம் இன்றைக்கு நடக்கும். அது எதுன்னு மட்டும் சொல்ல முடியாது. அது கடவுளுக்கும் உங்களுக்கும் மட்டும் தான் தெரியும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். மேலதிகாரிகளுக்குடன் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். அதை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அயராது உழையுங்கள். நல்லது நடக்கும். கொஞ்சம் சோம்பேறித்தனம் பட்டாலும் வேலையில் சிக்கல் வந்துவிடும். ஜாக்கிரதை, மார்கழி மாதம் முடிவதற்குள் வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகனுக்கு அபிஷேகம் செய்து வையுங்கள் நல்லது நடக்கும்.