இன்றைய ராசிபலன் (14.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

473

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மிக மிக அற்புதமான நாளாக இருக்கும். போகிப் பண்டிகையை கொண்டாடி மனநிறைவாக இந்த நாளை தொடங்குவீர்கள். குடும்பத்தில் குலதெய்வ வழிபாடு செய்யக்கூடிய வாய்ப்புகள் சில பேருக்கு கிடைக்கும். சில பேர் சொந்த ஊருக்கு சென்று இந்த வாய்ப்பை பெறுவீர்கள். மனமகிழ்ச்சியோடு இருக்கும் இந்த நாளில் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவுகள் உண்டாகும். சந்தோஷம் பெருகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று துடிப்போடு செயல்படுவீர்கள். எல்லா வேலையிலும் சுறுசுறுப்பு இருக்கும். சரியான நேரத்தில் சரியான உதவிகளை செய்து நல்ல பெயர் வாங்குவீர்கள். உங்களுடைய சமயோகித புத்தி இன்று சரியாக வேலை செய்யப் போகின்றது. நல்லது மட்டுமே நடக்கும். சில பேர் பொங்கல் கொண்டாட பண்டிகை நாட்களுக்காக சொந்த ஊர் வந்து இருப்பீங்க. சொந்த பந்தங்களோடு சந்தோஷமாக பொங்கலை கொண்டாட ஆயத்தமாகலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சின்ன சின்ன சிக்கல்கள் வேலையில் இருக்கும். வியாபாரத்தில் இருக்கும். எல்லாவற்றையும் தூக்கி அப்படி ஓரமா ஒதுக்கி வையுங்க. என்றுதான் பிரச்சனை இல்லை. குடும்பத்தை பாருங்க. பண்டிகையை பாருங்க. சந்தோஷமாக தைப்பொங்கல் திருநாளை கொண்டாட என்னென்ன வேலைகள் இருக்கிறதோ அதை செய்ய ஆர்வம் காட்டுங்கள். பிரச்சனைகள் எல்லாம் தானாக சரியாகிவிடும்.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். பொங்கலுக்கு தேவையான வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய தொடங்குவீர்கள். குழந்தைகள் உறவுகள் எல்லாம் மகிழ்ச்சியாக குடும்பத்தில் ஒன்று சேரும். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் நீங்கள் கொஞ்சம் கவனம் செலுத்தணும். வீட்டில் இருக்கும் பெண்கள் வேலை மட்டுமே கண்ணாக பார்க்காமல், ஆரோக்கியத்திலும் ஒரு கண் வைக்கணும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் சாதகமான சூழ்நிலை அமையும். நீங்கள் மனதில் நினைத்தது போல போகி பண்டிகை, பொங்கல் பண்டிகை கொண்டாட தயாராகி விடுவீர்கள். குழந்தைகளுக்கு மனதிற்கு பிடித்தபடி புது ஆடை, புது ஆபரண அணிகலன்கள் எல்லாம் வாங்கக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும். சந்தோஷம் நிறைந்த இந்த நாளில் குலதெய்வ வழிபாடு செய்ய மறக்காதீங்க. குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வரவும். மேலும் உங்களுக்கு இறைவனின் ஆசிர்வாதம் கிடைத்து சந்தோஷம் பெருகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருந்தாலும், சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முன்கோபத்தை குறைக்கணும். உறவுகளுக்கு மரியாதை கொடுக்கணும். யாரையும் அலட்சியமாக பேசக்கூடாது. பொறுப்பான வேலைகளை உங்கள் கையில் ஒப்படைத்தால், அதை முதலில் செய்யவும். பொறுப்புகள் குறையும் போது, உங்களுக்கு இந்த பிரச்சனையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்ததெல்லாம் நடக்காது. ஆனால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். ஆகவே மனது சோர்ந்து போக கூடாது. கிடைத்ததை வைத்து சந்தோஷமாக பண்டிகை நாளை கொண்டாடணும். அடுத்தவர்களோடு ஒப்பிட்டு உங்கள் வாழ்க்கையை பாக்காதீங்க. உங்கள் தகுதிக்கு என்ன கிடைத்திருக்கிறது என்பதை பார்த்து, மன நிறைவு அடைவது தான் சந்தோஷத்தை கொடுக்கும். இன்னும் எல்லாவற்றையும் பெஸ்டாக பெற வேண்டும் என்றால் உங்களுடைய உழைப்பை கூடுதலா போடணும் கூடுதலா சம்பாதிக்கணும் அவ்வளவுதான்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அவசர அவசரமான நாளாக இருக்கும். எந்த விஷயத்திலும் பொறுமையாக செயல்பட முடியாது. ரொம்ப பிசி ஸ்கெடியூல் இருக்கும். உங்களுக்கு எல்லாம் சந்தோஷமான விஷயம் தான். உடனடியாக பயந்து விட வேண்டாம். உற்சாகத்தில் உச்சகட்டத்தில் இருப்பீர்கள். சொந்த பந்தங்கள் எல்லாம் கூடியிருக்கும். சொந்த ஊருக்கு போயிருப்பீங்க. ரெக்க கட்டிக்கிட்டு பறக்க போறீங்க அவ்வளவுதான். காலில் பம்பரம் இல்லாதது தான் ஒரு குறை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். காலை நேரம் கொஞ்சம் அவசர அவசரமாக இழுபறியாக இருந்தாலும், இன்று மாலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். காலையில் செய்ய முடியாத நல்ல வேலைகளை மாலை செய்து முடிப்பீர்கள். காலையில் ஊருக்கு கிளம்ப முடியாதவர்கள் மாலை ஊருக்கு கிளம்பிடுவீங்க. சொந்த பந்தங்களை பார்ப்பீங்க. சந்தோஷமா இருப்பீங்க. காலையில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். சோம்பேறித்தனத்தை விட்டுருங்க.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மந்தமான சூழ்நிலை இருக்கும். ஊரே சுறுசுறுப்பாக எழுந்து போகிக் கொண்டாடி முடித்திருக்கும். நீங்கள் அப்போதுதான் கண் விழிப்பீர்கள். சோம்பேறித்தனத்தோடு தொடங்கினாலும், இந்த நாள் இறுதியில் எல்லாம் உங்களுக்கு சரியாகிவிடும். மனதிற்கு பிடித்த சொந்தத்தை சந்திக்க வாய்ப்பு உள்ளது. அந்த சொந்தம் யாராக வேண்டும் என்றாலும் இருக்கலாம். உங்க மனசு ரெக்க கட்டி பறக்கும் அளவுக்கு சந்தோஷமான நிகழ்வு இன்றைக்குள் நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் உஷாராக இருக்கணும். யாரிடம் என்ன பேசணும், யாரிடம் என்ன பேசக்கூடாது என்பதில் கவனம் செலுத்துங்கள். எல்லோரும் நம்ப சொந்தக்காரங்க தான். ஆனாலும் ஒரு வரைமுறையோடு நடந்து கொண்டால் இன்று வரும் பிரச்சனையிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. புரியும்படி சொன்னால் யாரிடமாவது நோஸ்கட் வாங்க வாய்ப்பு உள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு பண்டிகை நாள் சந்தோஷமாக சென்றாலும், சின்ன சின்ன மன கசப்பான விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நல்ல விஷயங்களை மிஸ் பண்ணுவீங்க. அதுக்கு காரணம் உங்களுடைய முன்கோபம் ஈகோவாக இருக்கலாம். அதை தவிர்த்து விட்டால் இந்த பொங்கல் பண்டிகையை உங்களை விட இந்த உலகத்தில் வேறு யாராலும் சந்தோஷமாக கொண்டாட முடியாது. உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லோருமே உங்களுக்கு நல்லது செய்றவங்க தான். யாரையும் சந்தேகப்படாதீங்க. மனதை அமைதியா வச்சுக்கோங்க.