இரவு பகல் பாராமல் புல் மப்பில் ஓயாமல் டார்ச்சர்… வலியால் துடித்த மனைவி : ஆத்திரத்தில் கணவருக்கு செய்த கொடூரம்!!

438

தருமபுரி…

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜா(40). லாரி ஓட்டுநர். இவரது மனைவி கனகா(36). இவர்களுக்கு 8 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி வரட்டாறு தடுப்பணை கால்வாயில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் ராஜா இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் அவசர அவசரமாக போலீசாருக்கு தெரிவிக்காமல் உறவினர்களுடன் சேர்ந்து மனைவி அடக்கம் செய்துள்ளார்.

இது தொடர்பாக சந்தேகமடைந்த ராஜாவின் தாயார் அளித்த புகாரின்பேரில், அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், ராஜா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து மர்ம மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்நிலையில் திடீரென ராஜாவின் மனைவி கனகா அரூர் காவல் நிலையத்திற்கு சரணடைந்தார்.


அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. கடந்த 6 மாதமாக வேலைக்கு போகாமல் தினமும் குடித்துவிட்டு ராஜா தூங்க விடாமல் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். சம்பத்தன்று போதையில் வந்த ராஜா வலுக்கட்டாயமாக உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். இவர் மறுப்பு தெரிவித்ததால் தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கனகா அருகில் இருந்த செங்கலால் ராஜாவை தாக்கி கீழேப் பிடித்து தள்ளியதில் மயங்கியுள்ளார். ஆத்திரம் அடங்காத கனகா, ராஜாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரது உடலை வீட்டிலிருந்து சுமார் 20 அடி தொலைவில் உள்ள வரட்டாறு கால்வாயில் இழுத்துச் சென்று கனகாவே தள்ளியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து கனகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.